தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் கதைச் சுருக்கம்
கார்த்திக் நடிப்பில் "தீரன்" படம் வெள்ளி கிழமை அன்று வெளி வருகிறது. திரு ஜாங்கிட் ஐபிஎஸ் அவர்களின் "பவாரியா ஆப்பரேசனை" அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் இது.
பவாரியா கிரிமினல்கள் தமிழகத்தில் 24 கொலைகள் செய்து கொள்ளையடித்த ஆபத்தான கேங். இந்தியா முழுவதும் பவாரியா கேங் மீது நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஜாங்கிட் அவர்கள் தலைமையிலான போலீஸ் படை பவாரியா கேங்கில் உள்ள 13 கிரிமினல்களை வட இந்தியா சென்று 2006-ல் கைது செய்து, அந்த கேங்கின் இரு லீடர்களை உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் சுட்டு கொன்றது. பவாரியா கும்பலின் கொடூர குற்றச் செயல்களில் இருந்து தமிழகம் காப்பாற்றப்பட்டது.