கொரோனா சம்பள தள்ளுபடி வழங்கிய பிரபல நடிகை..
கொரோனா காலகட்டம் பொதுவாகவே வெகுஜனங்களையும். திரையுலகினரையும் பெரிய அளவில் பாதித்தது. பல்லாயிரக்கணக்காணவர்கள் வேலை இழந்தனர். திரையுலகமும் முடங்கி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். வட்டிக்குப் பணம் வாங்கி படத் தயாரிப்பில் ஈடுபட்ட தயாரிப்பாளர்கள் 5 மாதம் ஷூட்டிங் நடத்த முடியாமலும், படங்களை ரிலீஸ் செய்ய முடியாமலும் தவித்தனர்.கொரோனா காலகட்டத்தில் நடிகர், நடிகைகள் தங்களது சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என எல்லா மொழியில் தயாரிப்பாளர்கள் இந்த கோரிக்கையை வைத்தனர். அதற்கு முன்பே விஜய் ஆண்டனி, சிவகார்த்திகேயன் போன்ற சில நடிகர்கள் தங்கள் சம்பளத்தைக் குறிப்பிட்ட சதவீதம் குறைத்துக் கொள்வதாக அறிவித்தனர். பெரிய நடிகர்களும். நடிகைகளும் சம்பளம் பற்றி வாய் திறக்கவில்லை.நடிகர்கள் சம்பளம் குறைப்பு பற்றி நடிகர் சந்தானத்திடம் கேட்டபோது,தயாரிப்பாளர்கள் கோரிக்கை நியாயமானதுதான்.
அதேசமயம் எல்லோரும் சம்பளம் குறைக்க வேண்டுமா? வேண்டாமா என்பது படங்கள் தியேட்டரில் வெளியாகி அதன் வசூல் எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்து முடிவு செய்வார்கள். வழக்கம்போல் யாருக்கும் பாதிப்பில்லாமல் வசூல் வந்தால் குறைக்க வேண்டியதில்லை, வசூல் குறைந்தால் குறைப்பார்கள் என்றார்.சம்பள குறைப்பு விஷயத்தில் சில கோல்மால்களும் நடக்கிறது. இப்படித்தான் ஒரு நடிகை சம்பளம் குறைக்கிறேன் என்று கூறிவிட்டுக் கடந்த படத்துக்கு வாங்கிய சம்பளத்தை விட அதிகமாகக் கூட்டிச் சொல்லிவிட்டு அதில் குறிப்பிட்ட சதவீதம் குறைக்கிறாராம். இதில் அவருக்குக் கடந்த சம்பளத்தை விட அதிக சம்பளத்தைத் தர வேண்டிய சூழல் ஏற்படுகிறதாம். ஜீவா ஜோடியாக முகமூடி படத்தில் நடித்தவர் பூஜா ஹெக்டே.
இவர் அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடித்த அலவைகுந்தபுரமோலு படம் சூப்பர் ஹிட் ஆனது. இதனால் இவரது சம்பளம் கோடிகளில் உயர்ந்தது. 2.5 கோடி சம்பளம் வாங்குகிறாராம். சமீபத்தில் இவர் துல்கர் சல்மானுடன் ஜோடியாக நடிக்கும் படமொன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். ஏற்கனவே பெரிய நடிகர்கள், பெரிய பட்ஜெட் படங்களுக்கு வாங்கிய 2.5 கோடி சம்பளத் தை இந்த பட தயாரிப்பாளர் தர இயலாத சூழல் இருந்ததால் இது குறித்து பூஜாவிடம் படத் தரப்பு சம்பளத்தைக் குறைக்கக் கேட்டது பூஜாவும் அவர்களுடன் பேச்சு வார்த் தை நடத்தி திருப்திகரமான தள்ளுபடி அளித்தாராம். இதையடுத்து ஒப்பந்தம் கையெழுத்தானது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.