42 நாள்களுக்குப் பின் களம் திரும்பும் கோலிhellip ரெஸ்ட் குறித்து ட்விஸ்ட் பதில்!

இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, 42 நாட்கள் ஓய்வுக்கு பின்னர் ஐபிஎல் தொடருக்காக களத்துக்கு திரும்புகிறார்.

ஓய்வு குறித்து அவர் சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா விளையாடிய தொடருக்குப் பின்னர் கிரிக்கெட்டிலிருந்து முழுவதுமாக 42 நாட்கள் ஓய்வில் இருந்திருக்கிறார் விராட் கோலி.

இந்த நேரத்தில் அவர் செய்தது, ஒன்று அதிக ஓய்வு எடுத்தது. மற்றொன்று கிரிக்கெட் பார்த்தது. புதிதாக மணம் முடித்துள்ளதால், இல்லற வாழ்க்கைக்கும் இந்த ஓய்வு கோலிக்கு தேவைப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், இன்னும் இரண்டே நாட்களில் ஐபிஎல் தொடர் தொடங்க உள்ள நிலையில், மீண்டும் பயிற்சியை ஆரம்பித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்கள் மத்தியில் கோலி பேசுகையில், `தென்னாப்பிரிக்கா தொடருக்குப் பின்னர் எனக்கு இந்த ஓய்வு தேவைப்பட்டது. அந்தத் தொடர் முடியும் தறுவாயில் இருந்த போது, என் உடல் நன்கு சோர்வடைந்திருந்தது. எனவே, கிரிக்கெட்டில் இருந்து எனக்கு முழு ஓய்வு தேவை என்பது புரிந்தது. அதனால் மூன்று வாரங்கள் பேட்டையே தொடாமல் இருந்தேன். அது எனக்கு ஒருவித அசௌகரிய உணர்வையே தந்தது’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>