தமிழ்நாட்டில் இன்றும் மழை தொடரும்...!

புரேவி புயலைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பல பாகங்களில் கனத்த மழை பெய்து வருகிறது. இன்றும் (டிசம்பர் 5) மழை தொடரும் என்று வானிலை அறிக்கைகளை தெரிவிப்பதாகச் செய்திகள் கூறுகின்றன.மன்னார் வளைகுடாவின் மேலே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ராமநாதபுரம் மாவட்டத்தின் கடற்கரையோரமாக 18 மணி நேரம் நகராமல் இருந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகும் வரைக்கும் 12 மணி நேரம் அதே இடத்தில் இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது.

நாகப்பட்டினத்தின் கொள்ளிடம், கடலூர் மாவட்டத்தின் சிதம்பரம் ஆகிய இடங்களில் முறையே 36 செ.மீ. மற்றும் 34 செ.மீ மழை பெய்துள்ள நிலையில் 12 இடங்களில் 10 முதல் 28 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது. ராமநாதபுரம், திருக்கோவிலூர் ஆகிய இடங்களில் 7 செ.மீ மழை பெய்துள்ளது. சென்னையில் மிதமான மழையும் மதுராந்தகத்தில் 10 செ.மீ மழையும் பெய்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கேரளா நோக்கியும் பின்னர் ஆந்திரப் பிரதேசம் நோக்கியும் நகரும் முன்பு இன்று (சனிக்கிழமை) தமிழ்நாட்டில் பரவலாக கனத்த மழையை எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.

More News >>