வரும் 27 -ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் லாரிகள் காலவரையற்ற ஸ்டிரைக்

தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் அவசர கூட்டம் நாமக்கல்லில் இன்று நடைபெற்றது.கூட்டத்திற்குப் பின் மாநிலத் தலைவர் குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:லாரிகளுக்கு தகுதி சான்று பெற வேகக்கட்டுப்பாட்டுக் கருவி, ஒளிரும் ஸ்டிக்கர், ஜிபிஎஸ் கருவி ஆகியவற்றைக் குறிப்பிட்ட ஓரிரு நிறுவனங்களிடம் மட்டும்தான் வாங்க வேண்டுமெனப் போக்குவரத்துத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பாக வேகக்கட்டுப்பாட்டுக் கருவி 14 நிறுவனங்களிடம் இருந்தும்,ஜிபிஎஸ் கருவி மற்றும் ஒளிரும் ஸ்டிக்கர் இரண்டு குறிப்பிட்ட கம்பெனிகளிடமிருந்து தான் வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களில் இவற்றின் விலை மிக அதிகம். இதனால் லாரி உரிமையாளர்களுக்கு அதிக செலவாகிறது.

லாரி உரிமையாளர்களைப் பாதிக்கும் இந்த உத்தரவைக் நீக்கக்கோரி வருகிற 27-ஆம் தேதி காலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் ,தமிழகத்திலுள்ள சுமார் 5 லட்சம் லாரிகள் இயங்காது. அதேபோல வெளி மாநிலங்களில் இருந்து வரும் லாரிகளையும் தமிழகத்திற்குள் அனுமதிக்கமாட்டோம் என்று தெரிவித்தார். லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்தால் நாளொன்றுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கும் என்று கருதப்படுகிறது.

இதே கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த 30 ஆம் தேதி தமிழகம் முழுவதும் அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லாரி உரிமையாளர்கள் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர் . அதன் பிறகும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பதால் இந்த சைக்கிள் ஈடுபட உள்ளதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

More News >>