ஒரு வருஷமோ... இரண்டு வருஷமோ... நான் சாகப் போகிறேன் - பாலிவுட் நடிகர் உருக்கம்

பாலிவுட்டில் நடிகரும், தயாரிப்பாளரும், திரை விமர்சகர் என அறியப்படுபவர் கமால் ரஷித் கான். இவர் அவருடைய படங்களிலே கவனம் செலுத்துகிறாரோ இல்லையோ, மற்றவர்களை பற்றி ஏதாவது சர்ச்சைக்குரிய வகையிலே கருத்து சொல்லி மாட்டிக்கொள்பவர்.

வீரம் படம் வெளியானபோது அதில் வயதான தோற்றத்தில் காட்சியளித்த அஜித்தை இவரையெல்லாம் எப்படித்தான் ஹீரோவாக மக்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ என ட்விட்டரில் கிண்டல் செய்து இருந்தார். அதேபோல், விவேகம் படத்தின் போதும், பாலிவுட்டில் அப்பா கேரக்டரில் அஜித் நடிக்கலாம், ஆனால் கோலிவுட்டில் ஹீரோவாக நடித்துக்கொண்டு இருக்கிறார் என்று விமர்சித்தார்.

மேலும், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டித்தொடர் அட்டவணையில் யுவராஜ்சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா பெயர்கள் இடம்பெறவில்லை. இதனை குறிப்பிட்டு கிண்டல் செய்த அவர், “கோலிக்கு நன்றி, எப்படியோ இரண்டு பேரையும் நீக்கி விட்டார். இப்போது ஒண்ணும் பிரச்னை இல்லை இரண்டு பேரும் உட்கார்ந்து ஒழுங்காக கமென்ட்ரி செய்யுங்கள்" என்று கூறி இருந்தார்.

இந்நிலையில், தனக்கு புற்றுநோய் உள்ளதாகவும், இதனால், ஒன்றிரண்டு ஆண்டுகளில் இறந்துவிடுவேன் என்று தெரிவித்துள்ளார். இது குறித்த தனது ட்விட்டர் பதிவில், “தற்போதுதான், எனக்கு வயிற்றுப் புற்றுநோயின் மூன்றாவது கட்டத்தை அடைந்துள்ளது உறுதியாகியுள்ளது. ஆகையால், நான் இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகள் தான் உயிரோடு இருப்பேன்.

நான் விரைவில் இறந்துபோய் விடுவேன் என்று நினைத்து என்னை அழைப்பவர்களது அழைப்புகளை ஏற்கப்போவது இல்லை. ஒவ்வொரு நாளும் மற்றவர்களது அனுதாபத்தில் வாழ்வதை நான் விரும்பவில்லை. யார் என்னை தொடர்ந்து குற்றம் சாட்டுகிறார்களோ, வெறுக்கிறார்களோ, நேசிக்கிறார்களோ அவர்களை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஏனெனில் நானும் சராசரி மனிதன் தான்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>