பெண்களுக்கான ஒருநோடாய் திட்டம், அசத்தும் அசாம் மாநிலம்!
அசாம் மாநிலமானது இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் இதுவும் ஒன்று. இம்மாநிலத்தின் முதலமைச்சராக சர்பானந்த சோனாவால் கடந்த 2019 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுப் பதவியேற்றார். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கைகளில் பல தமிழகத்தில் செயல்பாட்டிலுள்ள திட்டங்கள் ஆகும். இந்நிலையில் அம்மாநில அரசு பெண்கள் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு " ஒருநோடாய்" எனும் திட்டத்தை டிசம்பர் 1 ம் தேதியில் இருந்து நடைமுறைப் படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின் படி அசாம் மாநிலத்தில் பொருளாதார நலிவடைந்த பெண்களுக்கு மாதம் ரூ.830 அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு மாநில பட்ஜெட்டில் ஆண்டிற்கு 2400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் படி செலுத்தப்படும் ரூ.830 யை பயனாளர்களின் அடிப்படைத் தேவைகளை வாங்கப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி ரூ.400 பயனாளர்களின் மாதாந்திர மருத்துவச் செலவிற்கும், ரூ. 200 யை பயன்படுத்தி மானியத்தின் மூலம் 4 கிலோ பருப்பு வகைகள் வாங்கலாம், ரூ.80 க்கு சர்க்கரை மற்றும் ரூ.150க்கு பழங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின் மூலம் செலுத்தப்படும் தொகையானது பெண்களின் நேரடியான வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஆண்டிற்கு ரூ.10000, 27 இலட்சம் பயனாளர்களுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். மேலும் கல்வி முறையை ஊக்குவிக்கும் பொருட்டு இத்திட்டத்தின் கீழ் ரூ.25 இலட்சம் பள்ளிக்கல்வித் துறைக்குச் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனாளர்கள் தேர்வு
இத்திட்டத்தில் இணையப் பயனாளர்கள் கீழ்க்கண்ட தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்.1.விதவை பெண்கள் 2.திருமணமாகாத பெண்கள்3.விவாகரத்தான பெண்கள்4.இலவச அரிசி பெறும் குடும்ப அட்டை இல்லாதவர்கள் 5. தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் உள்ள பெண்கள் 6. சுய உதவிக் குழு திட்டத்தில் உள்ள பெண்கள்7. மாற்றுத்திறனாளிகள்போன்றோருக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும் http://finance.assam.gov.in/
இந்த திட்டத்தில் இணைவதற்கான விண்ணப்பப் படிவம் இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
https://tamil.thesubeditor.com/media/2020/12/Orunodoi-Scheme-Application-Form-(1).pdf