செல்ஃபிக்கு 16 எம்பி காமிரா: டிசம்பர் 8 அன்று அறிமுகமாகிறது மோட்டோ ஜி9 பவர்

லெனோவா நிறுவனத்தின் மோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போன் ஏற்கனவே ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் டிசம்பர் 8ம் தேதி நண்பகல் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஃப்ளிப்கார்ட் தளம் மூலம் இதை வாங்கலாம். எலக்ட்ரிக் வயலட் மற்றும் மெட்டாலிக் சேக் நிறங்களில் மோட்டோ ஜி9 பவர் போன் கிடைக்கும்.

மோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்

தொடுதிரை: 6.8 அங்குலம் எச்டி+ (720X1640 பிக்ஸல் தரம்) ஐபிஎஸ்இயக்கவேகம்: 4 ஜிபிசேமிப்பளவு: 128 ஜிபி (மைக்ரோ எஸ்டிகார்டு மூலம் 512 ஜிபி வரை அதிகரிக்கலாம்)முன்பக்க காமிரா: 16 எம்பி ஆற்றல்பின்பக்க காமிரா: 64 எம்பி + 2 எம்பி + 2 எம்பி ஆற்றல் கொண்ட மூன்று காமிராக்கள்இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10பிராசஸர்: குவல்காம் ஸ்நாப்டிராகன் 662 SoCமின்கலம்: 6000 mAhஎடை: 221 கிராம்

வைஃபை 802.11 ac, புளூடூத் 5.0, என்எஃப்சி, யூஎஸ்பி டைப்-சி, 4ஜி எல்டிஇ ஆகிய வசதிகள் கொண்ட மோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போனின் விலை விவரம் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், ஐரோப்பாவில் நிர்ணயிக்கப்பட்ட விலையைக் கொண்டு இந்தியாவில் உத்தேசமாக ரூ.17,400/- விலையில் கிடைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News >>