போதை மருந்து: நடிகை ஜாமீன் கேட்ட வழக்கில் திருப்பம்.. உச்ச நீதிமன்றம் அதிரடி..

நிமிர்ந்து நில் படத்தில் நடிகர் ஜெயம் ரவியுடன் நடித்தவர் ராகினி திவேதி. கன்னடத்தில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். கடந்த 2 மாதத்துக்கு முன் பெங்களுரில் சிலர் போதை மருந்து கடத்தியதாக கைது செய்யப்பட்டனர். அவர்களை விசாரித்தபோது கன்னட திரையுலகினருக்கு இதில் சம்பந்தம் இருப்பதாக தெரியவந்தது. அதனடிப்படையில் நடிகை ராகினி திவேதியை போதை மருந்து தடுப்பு போலீஸார் விசாரணைக்கு அழைத்தனர். அதை ஏற்று சென்றபோது அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் பெங்களுரு அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அதே போல் நடிகை சஞ்சனா கல்ராணியும் போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டு ராகினியுடன் சிறையில் அடைக்கப்பட்டார். ஒரே அறையில் இருவரும் இருந்த நிலையில் இவர்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற்பட்டது.

ராகினி இரவில் நீண்ட நேரம் விளக்கு எரியவிட்டு படித்துக் கொண்டிருந்தார். அவர் விளக்கு எரியவிடுவதால் தனக்கு தூக்கம் கெடுவதாக சஞ்சனா கூறினார். இதில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் வெவ்வேறு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் சஞ்சனாவும் புத்தகம் படிப்பத்தில் ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டார். ராகினி, சஞ்சனா இருவரும் ஜாமீன் கேட்டு பெங்களூரு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் ராகினி திவேதி சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அதில், என்னை கடந்த 90 நாட்களாக எந்தவித ஆதாரமும் இல்லாமல் போலீஸார் சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.

கர்நாடகா ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்த போது அதனை கோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. எனவே எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று குறிபிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ராகினிக்கு ஜாமீன் வழங்காதது ஏன் என்று கர்நாடகா ஐகோர்ட்டிடம் சுப்ரீம் கோர்ட் விளக்கம் கேட்டுள்ளது. இதுதொடர்பாக ராகினியின் வழக்கறிஞர் கூறும்போது ராகினி திவேதியை குற்றவாளியாக்கி கைது செய்திருப்பது மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக போலீஸார் செய்திருக்கும் செயல் ஆகும் ராகினி குற்றமற்றவர் என்றார். இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் என்ன உத்தரவு வழங்கப்போகிறது என்பதை திரையுலகினர் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர்.

More News >>