ஆன்லைன் கிளாஸில் நியூரோ சைன்ஸ் படித்த பாப்புளர் ஹீரோயின்..
படிப்பு விஷயத்தில் எப்போதுமே நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர்கள் கேரள மக்கள் தான். மலையாள நடிகைகளுக்கும் படிப்பில் ஈடுபாடு அதிகம். என்னதான் சினிமாவில் சம்பாதித்தாலும் படிப்பு விஷயத்தில் கவனமாக இருக்கின்றனர். நவ்யா நாயர், சாய் பல்லவி, லட்சுமி மேனன், நிவேதா தாமஸ் என பலரும் டிகிரி படிப்பை முடித்து மேற்பட்ட படிப்பும் படித்தனர். இதில் சாய்பல்லவி வெளிநாட்டில் சென்று டாக்டருக்கு படித்துவிட்டு வந்தார். இவர்களின் இந்த ஆர்வம் பல பெண்களுக்கு படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதற்கு முன்னுதாரணமாக அமைந்திருக்கிறது.
தற்போது மற்றொரு பிரபல நடிகையும் படிப்பு விஷயத்தில் டிகிரியை அதுவும் ஒன்றல்ல இரண்டு டிகிரி படிப்பை முடித்துள்ளார். அது வேறுயாருமல்ல நடிகை காஜல் அகர்வால் தான். இதுபற்றி அவர் கூறும் போது, லாக்டவுனில் நான் ஆன்லைன் வகுப்பில் சேர்ந்தேன். நியூரோ சைன்ஸ் மற்றும் குவண்டம் பிஸிக்ஸ் வகுப்புகளில் சேர்ந்து படித்தேன் என்றார். ஆனால் எதற்காக இந்த சப்ஜெக்ட்களை தேர்வு செய்து படித்தேன் என்பது தெரிவில்லை என்றும் அவர் கூறினார். இதேபோல் தான் நடிகை சமந்தாவும் கொரோனா லாக்டவுனில் ஆன்லைன் வகுப்பில் பேஷன் டிசைனிங் மற்றும் சத்துள்ள உணவு சமைப்பது பற்றியும் படித்து தேர்ச்சி பெற்றார்.
ஆனால் சமந்தா அந்த படிப்பை பயனுள்ள வகையில் மாற்றி இருக்கிறார். பேஷன் டிசனிங் நிறுவனம் தொடங்கி நடத்தி வருகிறார். காஜல் அகர்வால் கடந்த அக்டோபர் மாதம் தனது பாய்ஃபிரண்ட் கவுதம் கிட்ச்லுவை திருமணம் செய்துக் கொண்டு ஒரு மாதம் தேனிலிவு பயணமாக மாலத்தீவு சென்று திரும்பினார். அவர் விரைவில் சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். இது தவிர இந்தியன் 2 உள்ளிட்ட 2 படங்களில் நடிக்க உள்ளார்.