இன்று 2வது டி20 போட்டி: ஸ்டார்க், ஜடேஜா இல்லை
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, இன்று இரண்டாவது டி20 போட்டியில் ஆட உள்ளது. முதலாவது போட்டியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ள இந்தியா, இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் டி20 தொடரை கைப்பற்றும். முதலாவது போட்டியில் விளையாடிய ஜடேஜாவின் ஹெல்மட்டில் பந்து தாக்கியதால் அடுத்த இரண்டு போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
23 பந்துகளில் 44 ரன்களை எடுத்ததோடு, அவரது காயம் காரணமாக விளையாட வந்த சஹல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதும் இந்திய அணி வெற்றி பெற உதவியது. ஆஸ்திரேலிய அணியில் காயம் காரணமாக டேவிட் வார்னர், அஸ்டோன் அகார் ஏற்கனவே விலகியுள்ள நிலையில் தற்போது வேகப்பந்து வீச்சாளர் மிச்செல் ஸ்டார்க், குடும்ப நபர் ஒருவருக்கு உடல்நிலை பாதிப்புற்ற காரணத்தால் விலகுவதாக கோரிக்கை வைத்துள்ளார்.ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் அவருக்கு அனுமதியளித்துள்ளது.
யாருக்கு உடல்நலம் பாதிப்புற்றுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியில் ஏற்கனவே தொடக்க ஆட்டக்காரர் ஷார்ட், சுழற்பந்து வீச்சாளர்கள் மிச் ஸ்பெப்சன், நாதன் லியோன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இரண்டு அணிகளிலும் எந்தெந்த வீரர்கள் களம் காண இருக்கிறார்கள் என்பதை பொறுத்து ஆட்டம் அமையும். ஜடேஜா இல்லாதது பேட்டிங்கில் இந்திய அணிக்கு பின்னடைவாக அமையக்கூடும். இன்றைய போட்டி சிட்னியில் நடைபெற உள்ளது. புதன் கிழமை டி20 தொடரின் இறுதிப் போட்டி நடைபெறும். டிசம்பர் 17ம் தேதி அடிலெய்டில் முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்கும்.