புட்ட பொம்மா நடிகையுடன் இணையும் ஹீரோயின்..

வாரிசு ஹீரோவுக்கு அதிர்ஷ்டம்.. கடந்த சில ஆண்டுகளாகவே சிங்கிள் ஹீரோவுக்கு டபுள் அல்லது ட்ரிபிள் ஹீரோயின் ஃபார்முளா கோலிவுட், டோலிவுட்டில் அமலாகி உள்ளது. பிரபல நடிகர் படத்தில் பிரபல ஹீரோயின் ஒருவர் நடித்தாலும் மற்றொரு ஹீரோயினும் ஒப்பந்தம் செய்யப்படுகிறார். இது வர்த்தக ரீதியாக படத்துக்கு கை கொடுக்கிறது என்பதால் இந்த பாணியை பின்பற்றத் தொடங்கி உள்ளனர். விரைவில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் ஷூட்டிங் தொடங்க உள்ளது. இதில் நயன்தாராவுடன் சமந்தாவும் இணைந்து நடிக்க உள்ளார்.

ரஜினியின் அண்ணாத்த படத்தில் மீனா குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என 4 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். சிம்பு நடிக்கும் ஈஸ்வரன் படத்தில் நிதி அகர்வால், நந்திதா சுவேதா நடிக்கின்றனர். கிட்டதட்ட எல்லா ஹீரோக்கள் படங்களிலும் இரட்டை ஹீரோயினால் நடிக்கின்றனர். மம்மூட்டி வாரிசு நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளில் உருவாக உள்ளது. ஹனு ராஹ்வபுடி இயக்குகிறார். இதில் ஏற்கனவே பூஜா ஹெக் டே ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இதற்கான தனது சம்பளத்தில் கொரோனா கால தள்ளுபடியும் தந்தார்.

தற்போது நடிகை ராஷி கண்ணாவும் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். ராஷிகண்ணா ஏற்கனவே தமிழில் விஜய்சேதுபதியுடன் சங்கத் தமிழன், இமைக்கா நொடிகள் போன்ற படங்களில் நடித்திருந்தார். கொரோனா காலகட்டத்தில் துக்ளக் தர்பார் என்ற படத்தில் அதிதிராவ் ஹைத்ரி நடிக்க கேட்டபோது கால்ஷீட் பிரச்னை பற்றி விளக்கினார். இதையடுத்து அவருக்கு பதிலாக ராஷி கண்ணாவை துக்ளக் தர்பார் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். தற்போது புட்ட பொம்மா பாடல் புகழ் நடிகை பூஜா ஹெக்டே நடிக்கும் துல்கர் சல்மான் படத்திலும் நடிக்க ஒப்பந்தம்மாகி உள்ளார் ராஷி கண்ணா.

More News >>