கே.எஸ். அழகிரிக்கு கொரோனா பாதிப்பு: மருத்துவமனையில் அனுமதி
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரான கே.எஸ். அழகிரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மக்களவை மற்றும் தமிழக சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினரான கே.எஸ். அழகிரி தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் தலைவர் பொறுப்பில் இருக்கிறார்.
அவருக்கு இன்று காலையில் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியாகியிருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதோடு அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படியும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடக துறை தலைவர் ஆ.கோபண்ணா அறிக்கை மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.