யம் யம் ..சைனீஸ் மஷ்ரும் பிரைட் ரைஸ்..

யம் யம் .. பிரைட் ரைஸ் என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும்.. அதிலும் ருசியான சைனீஸ் மஷ்ரூம் பிரைட் ரைஸ் என்றால் ருசித்து பார்க்க வேண்டும் என்று தோன்றும்.. அப்புறம் எதற்கு யோசனை சைனீஸ் மஷ்ரூம் பிரைட் ரைஸ் உடனே செய்யலாம் வாங்க..  

தேவையான பொருள்கள்

காளான் - 10தக்காளி சாஸ் - 1 tspமிளகு தூள் - 1 tspசாதம் - 1 கப்பூண்டு - 3 பல்சோயா சாஸ் - 1 tspவெங்காய தாழ் - 1/4 கப்முட்டை - 1ஆலிவ் எண்ணெய் - 3 tspஉப்பு - தேவையான அளவு

செய்முறை

முதலில் சாதம் உதிரியாக இருக்க வேண்டும். காளானை நீள துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

பின் வாணலியில் எண்ணெய் சூடானதும் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும். பின் பச்சை வாசம் போகும் வரை வதக்கி காளான் சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்.

பின் உப்பு, முட்டை மற்றும் சாஸ் வகைகளை ஊற்றி 3 நிமிடம் வதக்கி சாதத்தை சேர்க்க வேண்டும் .

பிறகு 2 நிமிடம் வதக்கி ,வெங்காய தாழ் மற்றும் மிளகு தூள் தூவி ஒரு கிளறு கிளறி இறக்கவேண்டும் . மஷ்ரும் பிரைட் ரைஸ் ரெடி.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>