பூவே உனக்காக சீரியலில் இருந்து ஜோவிதா விலக காரணம் என்ன?? தந்தை லிவிங்ஸ்டன் வாக்குமூலத்தால் பரபரப்பு..

சில மாதங்களாக தனியார் தொலைக்காட்சியில் 'பூவே பூச்சூடவா' என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. ஒளிபரப்பாகிய சில நாள்களிலே ஆயிரம் கணக்கான ரசிகர்களை ஈர்த்தது என்றே கூறலாம். ஒரே ஆண் மகனை இரண்டு பெண்கள் காதலித்து வருகின்றனர். ஆனால் ஹீரோவுக்கு, ஹீரோயின் தோழியாக இருக்கும் ஜோவிதாவை மனதார காதலித்து வருகிறார். ஆனால் ஹீரோவுக்கு ஹீரோயினுடன் திருமணம் ஆகி விடுகிறது. ஹீரோவின் காதல் ஜெயிக்குமா என்பது தான் கதையின் கரு.

ஜோவிதா நடிகர் லிவிங்ஸ்டனின் மகள். லிவிங்ஸ்டன் பல படங்களில் ஹீரோவாகவும் மற்றும் காமெடி நடிகராகவும் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை அம்பிகாவின் மகன் அறிமுகமாகிய படத்தில் ஜோவிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் அத்திரைப்படம் பல பிரச்சனைகளால் வெளிவரவில்லை. அதன் பிறகு தான் ஜோவிதாவிற்கு பூவே உனக்காக சீரியலில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் லிவிங்ஸ்டன் தனது மகள் பூவே பூச்சூடவா சீரியலில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார்.

நடிக்க ஆரம்பித்த சில நாட்களிலே இந்த முடிவை எடுக்க மிகவும் மனம் வருந்துவதாக கூறியுள்ளார். இந்த முடிவுக்கு பின்னால் பல பிரச்சனைகள் உள்ளது. இதற்கு காரணமானவர்களின் பெயர் சொல்லி அவர்களை அசிங்கப்படுத்த விருப்பம் இல்லை. ஆனால் அதற்கான நேரம் வந்தால் கண்டிப்பாக வெளியிடுவேன் என்று துணிச்சலாக கூறியுள்ளார். தனது மகள் ஜோவிதா பூவே உனக்காக சீரியலை விட்டு டிசம்பர் 15 ஆம் தேதி விலகயுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

More News >>