முதலாளிகளின் 2,41,000 கோடியை தள்ளுபடி செய்த மோடி அரசு!
நாட்டில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், கார்ப்பரேட்டுகளுக்கு கொடுத்த கடன்களில், ரூ. 2 லட்சத்து 41 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்தது உண்மைதான் என்று மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இது தொடர்பாக, உறுப்பினர் ஒருவர் எழுப்பியிருந்த கேள்விக்கு எழுத்துப் பூர்வமாக பதில் அளிக்கப்பட்டுள்ள்து.
அதில், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் கடந்த மூன்றாண்டுகளில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 911 கோடி ரூபாய், ‘செயல்படா சொத்துக்கள்’ என்ற பெயரில் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது உண்மைதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கடன் தள்ளுபடி செய்யப்பட்ட கார்ப்பரேட்டுகள் யார்? என்ற கேள்விக்கு, அதை மட்டும் சொல்ல முடியாது என்று தெரிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியோ அல்லது அரசாங்கமோ இதுபோன்ற விஷயங்களை வெளியே சொல்வதில்லை என்றும், ‘அவை ரகசியமாக வைக்கப்படும்’ என்று கூறி முதலாளிகளுக்கான விசுவாசத்தைக் காட்டியுள்ளது.
மோடி ஆட்சியில் பெருமுதலாளிகளுக்கு விட்டுக் கொடுக்கப்பட்டுள்ள ரூ. 2 லட்சத்து 41 ஆயிரம் கோடி ரூபாயானது, முந்தையை ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்ட தொகையை விட இரண்டு மடங்குக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com