`சுஷில் குமார் தங்கம் வெல்வார்!- பளு தூக்கும் வீராங்கனை மல்லேஸ்வரி ஆருடம்
காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் தொடங்கியுள்ள நிலையில், இந்தியா சார்பில் சுஷில் குமார் பதக்கம் வெல்வார் என்று பளு தூக்கும் வீராங்களை மல்லேஸ்வரி ஆருடம் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட்டில் 21-வது காமன்வெல்த் போட்டிகள் நேற்று தொடங்கியுள்ளன. ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டிகளில் பங்கேற்க இந்தியாவிலிருந்து 220 பேர் சென்றுள்ளனர்.
முன்பெல்லாம் ஒரு சில பதக்கங்களை வெல்வதற்கே திணறும் இந்தியா, சமீப காலமாக முறையான பயிற்சி, விளையாட்டுக்கான உட்கட்டமைப்பு வசதி போன்றவற்றின் வளர்ச்சியால் பல பதக்கங்களை வெற்றி பெற்று வருகின்றது.
இந்தாண்டு காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா முதல் மூன்று இடங்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இது குறித்து பளு தூக்கும் பிரிவில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்லேஸ்வரி பேசியுள்ளார். அவர் கூறுகையில், `இந்தாண்டு கண்டிப்பாக இந்தியாவுக்கு பல பதக்க வேட்டைக் காத்திருக்கின்றன.
அதில் சிலர் கண்டிப்பாக தங்கம் வெல்வர். என் கணிப்புப்படி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சுஷில் குமாருக்கு அந்த வாய்ப்பு இருக்கிறது. அதேபோல பளு தூக்கும் பிரிவில் மீராபாய் சானு தங்கப் பதக்கம் வெல்வது உறுதி’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com