8 ஆண்டுக்கு பிறகு தமிழுக்கு வரும் பருத்திவீரன் நடிகை..
கண்களைக் கைது செய் படம் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை பிரியாமணி . பின்னர் அதுவொரு கனா காலம் படத்தில் நடித்தார். 2006ம் ஆண்டு பருத்தி வீரன் படத்தில் நடித்தார். இதில் தான் நடிகர் கார்த்தி ஹீரோவாக அறிமுகமானார். இதில் பிரியா மணிக்கு தேசிய விருது கிடைத்தது. இப்படம் பெரிய வெற்று பெற்றது. அதன்பிறகு மலைக்கோட்டை, தோட்டா போன்ற படங்களில் பிரியா மணி நடித்தார். இதற்கிடையில் தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்தினார் பல்வேறு படங்களில் அங்கு நடித்தார்.
மேலும் தமிழில் ஆறுமுகம். நினைத்தாலே இனிக்கும் படங்களில் நடித்தார். கடைசியாக கடந்த 2012ம் ஆண்டு சாருலதா படத்தில் நடித்தார். அதன்பிறகு அவர் கன்னடம், மலையாள படங்களில் நடித்து வந்தார். 8 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கொட்டேஷன் கேங் என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் பிரியாமணி. அதன் தொடக்க விழா நடந்தது.வெகு சில படங்களே படப் பிடிப்புக்கு முன்னரே நம் எதிர் பார்ப்பைத் தூண்டும் படமாக ஆர்வத்தை அதிகரிக்கும் படைப்பாக இருக்கும். அந்த வகையில் “கொட்டேஷன் கேங்” திரைப்படம் துவங்குவதற்கு முன்னதாகவே தரமான படைப்பு எனப் பெயர் பெற்றுள்ளது.
தேசிய விருது நாயகி பிரியாணி மற்றும் பேபி சாரா படத்தின் முன்னணி கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் இப்படத்தை இயக்குநர் விவேக் இயக்குகிறார். மேலும் ஃபிலிமினாடி எண்டர்டெயின் மெண்ட் (Filminaty Entertain ment) சார்பில் காயத்திரி சுரேஷ், ஶ்ரீ குரு ஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் ஜி. விவேகானந்தன் உடன் இணைந்து இந்த “கொட் டேஷன் கேங்” திரைப் படத்தை தயாரிக்கவும் செய்கிறார் இயக்குநர் விவேக். இப்படத் தின் படப்பிடிப்பு மிகப்பிரமாண்டமான விழாவுடன் மும்பையில் துவக்கப்பட்டது. இப்படம் ஒரே நேரத்தில் ஐந்து இந்திய மொழிகளில் மும்பை, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் மிக முக்கிய பகுதிகளில் படமாக்கப்படுகிறது.
இப்படத்தில் ரெட் ரெய்ன் புகழ் விஷ்ணு வாரியர், Zee ஜி புகழ் அக்ஷயா, கியாரா, சோனல், கேதன் கராந்தே, சதீந்தர் மற்றும் ஷெரீன் ஆகிய இளம் திறமைகள் இணைந்து நடிக்கவுள்ளனர்.படம் பற்றி இயக்குநர் விவேக் கூறியதாவது: இப்படம் அனைத்திந்திய ரசிகர்களுக்குக் கதை சொல்லலிலும், தொழிற் நுட்ப வடிவிலும் புதிய அனுபவமாக, தரமான படைப்பாக இருக்கும். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர்கள் மிக விரைவில் வெளியிடவுள்ளனர் என்றார்.