நடிகர் சங்கத்தில் தீ விபத்து.. முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பல்..
தென்னிந்திய நடிகர் சங்கம் அபிபுல்லா சாலையில் உள்ளது. அங்கிருந்த பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. புதிய கட்டிடம் கட்டுவதில் சிக்கல் ஏற்பட்டு கோர்ட் வரை விவகாரம் சென்றது. அபிபுல்லா சாலையில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் கீழ் தளத்தில் நடிகர் சங்க அலுவலகம் இயங்கு வருகிறது. இங்கு இன்று காலை திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இத்குறித்து அடுக்குமாடி குடியிருப்பு காவலர் இதுகுறித்து தீ அணைப்பு துறைக்கு தகவல் அளித்தார்.
அவர்கள் விரைந்து வந்து தியை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ விபத்தில் முக்கிய ஆவணம் மற்றும் கம்ப்யூட்டர் போன்றவை எரிந்து நாசமானதாக தெரிகிறது. நடிகர் சங்கத்துக்கு நாசர் தலைமையான நிர்வாகிகள் செயலாற்றி வந்தனர். இந்நிலையில் நடிகர் சங்கத்துக்கு புதிதாக தேர்தல் நடத்த ஐகோர்ட் உத்தரவிட்டது. கடந்த ஜூன் மாதம் தேர்தல் நடந்தது. இதில் பிரச்னைகள் ஏற்பட்டதையடுத்து வழக்கு தொடரப்பட்டன. அது விசாரணையில் உள்ளது.
தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணபடாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் குறித்த முக்கிய தஸ்தாவேஜுக்கள் நுங்கம்பாக்கம் சவுத் இந்தியன் வங்கியில் வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் நடந்து முடிந்த நடிகர் சங்க தேர்தலில் நடிகர் விஷால் தலைமையிலான அணியும், நடிகர் பாக்யராஜ் தலைமையிலான அணியும் போட்டியிட்டன. தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை முடியாதநிலையில் தனி அதிகாரியே சங்க செயல்பாடுகளை கவனித்து வருகிறார்.