சொந்த ஊரில் மெழுகு சிலைhellip ட்விட்டரில் நெகிழ்ந்த ஷாருக்கான்!
பாலிவுட்டின் பாட்ஷா என்றழைக்கப்படும் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.
இதை அவரும், அவரது ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். ஷாருக்கானுக்கு முதன் முதலில் லண்டனில் இருக்கும் மேடம் துஸாட்ஸில் மெழுகு சிலை கடந்த 2007-ம் ஆண்டு வைக்கப்பட்டது. அங்கு மிகப் பெரும் நடிகர்களுக்கும் ஆளுமைகளுக்கு மட்டுமே மெழுகு சிலை வைக்கப்படும் என்பதால், இது மாபெரும் கௌரவமாக கருதினார் ஷாருக்.
அப்போது, அவர் லண்டனுக்கு நேரில் சென்று தனது சிலை அருகில் நின்று போஸும் கொடுத்தார். சமூக வலைதளங்கள் பிரபலமாகாத காலத்திலேயே அது படு வைரலாக ஆனது. இந்நிலையில் ஷாருக்கானுக்கு, டெல்லியில் இருக்கும் மேடம் துஸாட்ஸ் அமைப்பு ஒரு மெழுகு சிலையை உருவாக்கியுள்ளது.
நீல நிற ஷெர்வானியில், கையை அகல விரித்தது போல் போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறது அந்த மெழுகு சிலை. இது குறித்து ஷாருக்கானே தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ந்துள்ளார். `என் சொந்த ஊரான டெல்லியில் என் சிலை வைத்திருப்பது மிகவும் சந்தோஷமான விஷயம். மேடம் துஸாட்ஸ் அமைப்புக்கு மிக்க நன்றி’ என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் கிங் ஆஃப் ரோமான்ஸ் ஷாருக்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com