397 ஆண்டுகளுக்குப் பின் அருகருகே வியாழன், சனி கிரகங்கள் வரும் அரிய நிகழ்வு

வியாழன், சனி கிரகங்கள் நெருக்கமாக வரும் அரிய நிகழ்வு, 397 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 21ம் தேதி நிகழ உள்ளது.இது குறித்து எம்பி பிர்லா கோளரங்கத்தின் இயக்குனர் தேபி பிரசாத் துரை தெரிவித்துள்ளதாவது: சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கிரகங்களான வியாழனும். சனியும் 1623ம் ஆண்டு அருகருகே தோன்றின. அதற்குப் பிறகு, இந்த இரு கிரகங்களும் மிக அருகருகே வருகிற நிகழ்வு இம்மாதம் 21ம் தேதி நடக்க உள்ளது.அப்போது, இரு கிரகங்களும் சிறிய நட்சத்திரங்களைப் போல் தோற்றமளிக்கும். இது, கிரகங்களின் மிகப்பெரிய இணைப்பு, என்று அழைக்கப்படுகிறது, எனத் தெரிவித்துள்ளார்.

இந்த அரிய நிகழ்வுக்குப் பிறகு, அடுத்ததாக வரும் 2080ம் ஆண்டு, மார்ச் 15ம் தேதிதான் இந்த 2 கிரகங்களும் மீண்டும் அருகருகே தோன்ற உள்ளன. 21ம் தேதி நடக்கும் அரிய சம்பவத்தை, நாட்டின் முக்கிய நகரங்களில் மாலை சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு காண முடியும்.

More News >>