ஃபிட்னஸ் பயிற்சி: ஹீரோ- ஸ்ருதி போட்டா போட்டி.. ஜெயித்தது யார்?

நடிகை ஸ்ருதி ஹாசன் கொரோனா ஊரடங்கில் தனி வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அவருடன் செல்ல பூனை குட்டி மட்டுமே இருந்தது. அதனுடன் விளையாடி பொழுதைக் கழித்ததுடன் இசை பயிற்சி செய்தும், பாடல் ஆல்பத்துக்காக பாடல் எழுதியும் இசை கம்போஸ் செய்தும் நேரத்தைச் செலவழித்தார். தான் நடிக்கும் வெப் சீரிஸுக்காக ஸ்டண்ட் பயிற்சி பெற்றார். இப்படியே 6 மாதம் கடத்தினார்.

இந்நிலையில் அவர் நடிக்கும் லாபம், தெலுங்கில் கிராக் படங்களின் படப்பிடிப்பிலிருந்து அழைப்பு வந்தது. ஸ்ருதி ஹாசன் லாக்டவுன் வீட்டு முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார் கொரோனா தடுப்பு உடை வாங்கி அணிந்துக் கொண்டு படப்பிடிப்புக்குப் புறப்பட்டார்.தர்மபுரி பகுதியில் நடந்த லாபம் படப்பிடிப்பில் கலந்து கொண்டு விஜய் சேதுபதியுடன் நடித்தார். அங்குக் கிராமப் புறப் பகுதியில் படப்பிடிப்பு நடந்ததால் ஊர் மக்கள் கூட்டம் கூட்டமாகத் திரண்டு வந்து ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்.

ஆனால் கொரோனா காலகட்ட விதிமுறைகள் கூட்டத்தினர் பின்பற்றவில்லை, சமூக இடைவெளி. முககவசம் எதுவும் இல்லாமல் கூடியதால் கொரோனா அச்சம் பரவியது. இதையடுத்து படக்குழுவுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டதுடன் கூட்டமும் கட்டுப்படுத்தப்பட்டு கொரோனா விதிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டனர்.லாபம் படப்பிடிப்பு முடித்து விட்டு ஐதராபாத் புறப்பட்ட ஸ்ருதி ஹாசன் அங்கு ரவிதேஜாவுடன் நடிக்கும் கிராக் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அந்த ஹூட்டிங் கில் ஜாலியாக இருந்த ஸ்ருதி ரவிதேஜாவுடன் உடல் ஃபிட்னஸ் பற்றி பேச்சு வந்தது. ரவிதேஜாவுக்கு எப்போதும் ஃபிட்டாக உடலை வைத்திருப்பவர் என்ற பெயர் உண்டு. இதனால் அவரை மாஸ் மஹராஜ் என்று ரசிகர்கள் அழைக்கின்றனர்.

பேச்சு வாக்கில் ரவி தேஜாவிடம் ஸ்ருதி சவால் விட்டார். யார் ஃபிட்டாக இருக்கிறார்கள் என்று பார்ப்போமா இப்போதே போட்டியை நடத்தலாம் என்றார். ரவி தேஜாவும் அதற்கு ஒப்புக் கொண்டார்.இருவரும் தரையில் கவுழ்ந்த நிலையில் படுத்து பின்னர் இரு கைகளையும் தரையில் ஊன்றி உடலை மேலே தூக்கியபடி பேலனஸ் செய்தனர். யார் அதிக நேரம் இதில் தாக்கு பிடிக்கிறார்கள் என்பது தான் சவால். கடைசியில் ரவிதேஜாதான் ஜெயித்தார். ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு ஸ்ருதியால் பேலன்ஸ் செய்ய முடியாமல் தரையில்படுத் தார். அந்த வீடியோவை ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

அவர் கூறும்போது,கிராக் டீமிற்கு எனது வாழ்த்துக்கள். ரவிதேஜாவுக்கு நன்றி. என்னிடம் அன்பு பாராட்டி, படப்பிடிப்பிலும் ஜாலியான சூழலை ஏற்படுத்தினார். இயக்குனர் மற்றும் படக்கு குழு முழுவதற்கும் குடும்பம் போல் இருந்து பணியாற்றியதற்காக நன்றி என்றார்.

More News >>