ஐபிஎல் தொடக்க விழாவில் ஆட்டம் போடப்போகும் ஹிரித்திக் ரோஷன்!
கிரிக்கெட் திருவிழா என்றழைக்கப்படும் ஐபிஎல்-ன் 10-வது சீசனின் தொடக்க விழாவில் பாலிவுட் ஸ்டார் ஹிரித்திக் ரோஷன் நடனமாட உள்ளார்.
பல சர்ச்சைகளைக் கடந்து இந்தாண்டு ஐபிஎல் சீசன் இன்னும் இரண்டு நாட்களில் தொடங்க உள்ளது. முதல் போட்டியே இரண்டு ஆண்டுகள் தடை பெற்று தற்போது கம்-பேக் கொடுக்கும் சிஎஸ்கே-வுக்கும், அதன் பரம வைரியான மும்பை இந்தியன்ஸுக்கும்தான்.
முதல் போட்டியே ரசிகர்கள் மத்தியில் எக்கசக்க எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் மிக பிரமாண்டமாக நடைபெறும் ஐபிஎல் தொடரின் தொடக்க விழாவில் இம்முறையும் பல புதுமைகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதற்கு முத்தாயப்பாக, பல ஆண்டுகள் மேடைகளில் நடனமாடாமல் இருந்த ஹிரித்திக் ரோஷன் ஆட்டம் போட உள்ளார். இதை உறுதி செய்யும் வகையில் ஹிரித்திக், `ஆமாம், நான் இந்தாண்டு ஐபிஎல் தொடரின் தொடக்க விழாவில் ஒரு சூப்பர் நடன பெர்பாமன்ஷ் தர உள்ளேன் என்பதை அதிகாரபூர்வமாக தெரிவிக்கிறேன். அதற்கான பயிற்சியை நான் எடுக்கத் தொடங்கி விட்டேன். ரசிகர்கள் முன்னிலையில் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் நடனமாடுவது மிகுந்த மகிழ்வளிக்கும்’ என்றுள்ளார் உற்சாகமாக.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com