விஜய்யின் மாஸ்டர் படத்துடன் மோதும் ஈஸ்வரன்.. பொங்கலுக்கு ஜே ஜே..
சிம்பு ஒரு வலுவான மறுபிரவேசம் செய்ய ஆவலுடன் காத்திருக்கிறார். கடந்த ஒன்றரை ஆண்டாக படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். கொரோனா லாக் டவுனில் சுமார் 30 கிலோ உடல் எடையைக் குறைத்தார்.கொரோனா ஊரடங்கு தளர்வில் சுசீந்திரன் இயக்கிய 'ஈஸ்வரன்' ஷூட்டிங்கில் கலந்துகொண்டு சாதனை பதிவாக 40 நாட்களில் படப் பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகளை முடித்துக்கொடுத்து கோலிவுட்டில் ஒரு ஆச்சரியத்தை படரவிட்டார். அத்துடன் ஷூட்டிங் லேட்டாக வருவதாக தன் மீதிருந்த புகார்களையும் இந்த ஒரு படத்தில் ஊதித் தள்ளினார்.
ஈஸ்வரன் படத்தை முடித்த கையோடு மாநாடு படப்பிடிப்பில் சிம்பு கலந்துகொண்டார். இதை வெங்கட் பிரபு இயக்குகிறார். இதை அரசியல் த்ரில்லர் படப்பிடிப்பாக நடக்கிறது. இதன் படப்பிடிப்பும் படுவேகமாக நடக்கிறது. அப்படத்திலிருந்து சிம்புவின் ஃபர்ஸ்ட் லுக் ஸ்டில் வெளியாக வைரலானது. சமீபத்திய சலசலப்பு என்ன வென்றால், பொங்கலுக்கு 'ஈஸ்வரன்' படத்தை வெளியிட சிம்பு ஆர்வமாக உள்ளார்.
சுசீந்திரன் இயக்கிய 'ஈஸ்வரன்' ஆரம்பத்தில் இருந்தே பொங்கல் 2021ன் போது வெளியிடத் திட்டமிடப்பட்டது. மேலும் தயாரிப்பாளர்கள் அதை நோக்கி தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். ஆனால் விஜய்யின் 'மாஸ்டர்' கிட்டத்தட்டப் பொங்கலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சிம்புவின் 'ஈஸ்வரன்' ரிலீஸ் பாதிக்கப்படக்கூடும் என்று கூறப்படுகிறது. தியேட்டர் உரிமையாளர்களும் மாஸ்டர் படத்தைப் பெரிய திரைகளில் வெளியிட ஆர்வமாக உள்ளனர். ஆனாலும் சிம்பு தனது திட்டத்திலிருந்து பின்வாங்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாகவும், ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் நாளில் 'ஈஸ்வரன்' படத்தை வெளியிட ஆர்வமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
'மாஸ்டர்' ரிலீஸ் சிம்பு பட வெளியீட்டிற்கு ஒரு பிரச்சனையாக இருக்காது என்றே கருதப்படுகிறது. ஏனென்றால் மாஸ்டர் பொங்கலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'ஈஸ்வரன்' மற்றும் 'மாஸ்டர்' ஆகிய இரு படங்களின் டீஸரும் தீபாவளியில் வெளியிடப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது. கடைசியாக விஜய்யின் துப்பாக்கி படத்துடன் தீபாவளியின்போது 'ஓஸ்தி' படத்துடன் சிம்பு மோதினார். இரண்டு நட்சத்திரங்களின் படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன, அதே நேரத்தில் விஜய்யின் 'துப்பாக்கி' 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது.