இன்னும் 3 ஆண்டுகளுக்குள் இந்திய கிராமங்களுக்கு அதிவேக பைபர் டேட்டா நெட்வொர்க் : பிரதமர் மோடி

இன்னும் மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள கிராமங்களுக்கு அதிவேக பைபர் டேட்டா நெட்வொர்க் அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளதாக இந்தியன் மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்தார்.இந்திய டெலிகாம் துறையின் முக்கிய அம்சமாகக் கருதப்படும் இந்தியன் மொபைல் காங்கிரஸ் மாநாடு காணொளி மூலம் இன்று நடந்தது . இதில் பிரதமர் மோடி பேசியதாவது : உலக நாடுகளின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களுக்குத் தொழிற்சாலை துவங்க இந்தியா மிகவும் விரும்பத்தக்க நாடாக மாறியுள்ளது.

இந்த நிலையில், அடுத்து டெலிகாம் உபகரணங்களில் இந்தியா முன்னோடியாக இருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.இதனையடுத்து இந்திய டெலிகாம் துறையில் முக்கிய வளர்ச்சியாக இன்னும் 3 ஆண்டுகளுக்குள் இந்தியக் கிராமங்கள் அனைத்திலும் அதிவேக பைபர் டேட்டா நெட்வொர்க் அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் தற்போது 1 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் மொபைல் போன் பயன்படுத்தி வருகின்றனர். உள்ளனர், அதிலும் குறிப்பாக அதிவேக இண்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 750 மில்லியனையும் தாண்டிவிட்டது. இந்த நிலையில் இந்திய மக்களின் டேட்டாவின் தேவை அதிகமாகியுள்ளது. இந்தியாவில் கடந்த 4 வருடத்தில் மட்டும் 50 சதவீதம் டெலிகாம் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது. இதில் சரிபாதி கிராம மக்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷயம் . நாடு முழுவதும் டிஜிட்டல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் வேளையில் மேம்படுத்தப்பட்ட சேவை மிகவும் அவசியமாக உள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கூடிய விரைவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய உழல்வோம். இதற்கான பணிகளை விரைவில் துவங்க உள்ளதாகவும், அதே சமயம் இந்தியக் கிராமங்களில் அதிகளவிலான வாடிக்கையாளர்களுக்குச் சேவை அளிக்க வசதியாக அதிவேக பைபர் டேட்டா நெட்வொர்க் அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்தார். உலகிலேயே இந்தியாவில் தான் மிகவும் குறைவான விலையில் டேட்டா சேவை அளிக்கப்படுகிறது. இதனால் அனைத்துத் தரப்பு மக்களும் இண்டர்நெட் மூலம் வாழ்க்கையை மிகவும் எளிதாக்கிக் கொள்கின்றனர்.

More News >>