டிரிபிள் ரியர் காமிரா: மோட்டோ ஜி9 பவர் டிசம்பர் 15 முதல் விற்பனை

கடந்த மாதம் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 15ம் தேதி முதல் ஃப்ளிப்கார்ட் தளத்தில் இதை வாங்கலாம். ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளே டிசைன் மற்றும் பின்புறம் மூன்று காமிராக்கள் இதன் சிறப்பம்சமாகும்.

மோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்தொடுதிரை: 6.8 அங்குலம் எச்டி+ (720X1640 பிக்ஸல் தரம்) ஐபிஎஸ்இயக்கவேகம்: 4 ஜிபிசேமிப்பளவு: 128 ஜிபி (மைக்ரோ எஸ்டிகார்டு மூலம் 512 ஜிபி வரை அதிகரிக்கலாம்)முன்பக்க காமிரா: 16 எம்பி ஆற்றல்பின்பக்க காமிரா: 64 எம்பி + 2 எம்பி + 2 எம்பி ஆற்றல் கொண்ட மூன்று காமிராக்கள்இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10பிராசஸர்: குவல்காம் ஸ்நாப்டிராகன் 662 SoCமின்கலம்: 6000 mAhஎடை: 221 கிராம்

வைஃபை 802.11 ac, புளூடூத் 5.0, என்எஃப்சி, யூஎஸ்பி டைப்-சி, 4ஜி எல்டிஇ ஆகிய வசதிகள் கொண்ட மோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போனின் விலை ரூ.11,999/- ஆகும்

More News >>