சர்ச்சைக் காட்சிகள் - காலா திரைப்படத்தில் 14 இடங்களில் வெட்டு

காலா திரைப்படத்தில் வன்முறைக் காட்சிகள், அரசியல் சர்ச்சைக் காட்சிகள் அதிகம் இருந்ததால் 14 இடங்களை கத்தரிக்க சொல்லியுள்ளது.

கபாலி திரைப்படத்திற்கு பிறகு பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘காலா’. தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, லைகா நிறுவனம் வெளியிடுகிறது. ‘காலா’ இந்த மாதம் 27-ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘காலா’ படத்தை பார்த்த தணிக்கை வாரிய அதிகாரிகள் 14 இடங்களில் வெட்டச் சொல்லியிருக்கின்றனர். 14 இடங்களில் ‘கட்’ கொடுத்தும் கூட ‘யு/ஏ’ சான்றிதழ் தான் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வெட்டுகள் இல்லாமல் படம் வெளியாக ஆசைப்பட்டால் “ஏ” சான்று தருவதாக தணிக்கை வாரிய அதிகாரிகள் கூறியதால், “யு/ஏ” சான்றிதழுக்கு ‘காலா’ படக்குழு பணிந்துள்ளது.

‘காலா’ படத்தில் வன்முறைக் காட்சிகள், அரசியல் சர்ச்சைக் காட்சிகள் அதிகம் இருந்ததால் 14 வெட்டுகளை தணிக்கை வாரியம் பரிந்துரைத்துள்ளதாக தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை படிக்க: thesubeditor.com

More News >>