முதல் பட இயக்குனரை துரத்தி எச்சரித்த நடிகை.. சாய் பல்லவி ஓபன் டாக்..

திரையுலகில் ஹீரோக்களுக்கு ஏகப்பட்ட மரியாதையும், மற்றவர்களுக்கு அவ்வாறு மரியாதை கிடைப்பதில்லை என்ற மனக்குறை பல நட்சத்திரங்களுக்கு மனதில் உண்டு அதை வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறார் நடிகை சாய் பல்லவி.தமிழ், தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளில் நடிக்கிறார் சாய் பல்லவி. தமிழில் கடந்த ஆண்டு கடைசியாக என் ஜி கே படத்தில் நடித்தார். இதில் சூர்யா ஹீரோவாக நடிக்க செல்வராகவன் படத்தை இயக்கினார்.

ஆனால் இப்படம் சாய் பல்லவிக்கு எந்தவொரு வரவேற்பையும் பெற்றுத் தரவில்லை. முன்னதாக அவர் தனுஷுடன் மாரி 2 படத்தில் நடித்தார். இப்படத்தில் அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. சாய் பல்லவி நன்றாக நடிப்பார் என்று பலரும் எண்ணியிருந்த நிலையில் தனுஷுடன் ரவுடி பேபி பாடலுக்கு செம ஆட்டம் போட்டுச் சிறப்பாக நடனமும் ஆடுவார் என்று பேச வைத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இந்த பாடல் யூ டியூபில் வெளியாக 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்த பாடல் என்ற சாதனை நிகழ்த்தியது. அந்த நேரத்தில் தனுஷ் வெளியிட்ட மகிழ்ச்சி செய்தியில் சாய் பல்லவியைப் பற்றிக் குறிப்பிடவில்லை என்று சாய் பல்லவியின் ரசிகர்கள் சர்ச்சை கிளப்பினார்கள்.

தற்போது லவ் ஸ்டோரி உள்ளிட்ட 2 தெலுங்கு படங்களில் நடிக்கிறார் சாய் பல்லவி.தமிழில் அவருக்குக் கைவசம் படங்கள் எதுவும் இல்லை.இதற்கிடையில் நெட்பிளிக்ஸ் தயாரித்த பாவகதைகள் என்ற படத்தில் சமீபத்தில் நடித்தார் சாய்பல்லவி.கடந்த 2 மாதத்துக்கு முன் சாய் பல்லவிக்கு பேஸ்கிரீம் போன்ற சில விளம்பரங்களில் நடிக்க அழைப்பு வந்தது. சம்பளமும் பல லட்சம் தருவதாக கூறினார்கள். ஆனால் அதில் நடிக்க மறுத்து விட்டார். இந்நிலையில் மும்பை மீடியாக்களுக்கு ஆன்லைனில் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், மலையாளம், தெலுங்கு திரையுலகுக்கு என்ன வித்தியாசம், விளம்பர படங்களில் நடிக்க மறுத்தது ஏன்? என்று கேட்டனர். அதற்குச் சாய் பல்லவி பதில் அளித்தார். அவர் கூறும் போது,தெலுங்கு திரையுலகில் ஹீரோக்களுக்கு தனிப்பட்ட முறையில் பெரிய அளவில் மரியாதை தருவார்கள் மலையாள திரையுலகில் எல்லோருக்கும் சம அளவில் மதிக்கப்படுவார்கள். விளம்பர படத்தில் நடிக்காததற்குக் காரணம் அதுபோன்ற விளம்பர படங்களில் நடித்து மக்களைத் தவறாக வழிகாட்ட விரும்பவில்லை என்றார்.

முன்னதாக தனது முதல் படம் பிரேமம் அனுபவம் பற்றி பேட்டி அளித்த சாய் பல்லவி இயக்குனரை துரத்து துரத்து என்று துரத்திய சம்பவம் பற்றி கூறினார். இதுபற்றி அவர் கூறும்போது.பிரேமம் படத்தை அல்போன்ஸ் புத்ரன் இயக்கினார். அவரை நான் முன்பின் பார்த்ததில்லை. கேள்விப்பட்டதும் இல்லை. ரியாலிடி ஷோ ஒன்றில் நான் நடனம் ஆடியதைக் கண்டு அவர் என்னை ஃபேஸ்புக்கில் பாராட்டினார். அது ஏதோ ஃபேக் அக்கவுண்ட் என்று அதை நீக்கிவிட்டேன். ஆனால் விடாமல் அவர் என்னைத் தொடர்பு கொண்டார். அவர் என்னை பின் தொடர்வதாகச் சந்தேகம் எழுந்தது. பிறகு போன் மூலம் அடிக்கடி அழைத்தார். அந்த நபர் போன் அழைப்பை அட்டண்ட் செய்ய வேண்டாம் என்று என் அம்மாவிடம் கூறியதுடன் தொடர்ந்து போன் செய்தால் போலீசில் புகார் செய்வேன் என்று எச்சரித்தேன்.

பின்னர் அவர் நேரடியாக என்னை ஒருமுறை சந்தித்துத் தான் யார் என்பதை சுயமாக என்னிடம் அறிமுகம் செய்துக்கொண்டதுடன் ப்ரேமம் படத்தில் என்னை நடிக்க வைக்கவே தொடர்ந்து அழைத்தாகவும் தேவையென்றால் நெட்டில் விக்கி பீடியாவில் சரிபார்த்துக் கொள்ளவும் சொன்னார். பின்னர் தான் அவர் திரைப்பட இயக்குனர் என்பது எனக்குத் தெரிந்தது. நான் தர்மசங்கடத்துக்குள்ளானேன். பிரேமம் படத்தில் மலர் டீச்சராக என்னை நடிக்க வைத்தார் அல்போன்ஸ் புத்ரன் என்றார்.

More News >>