நாளை நமதே என முழங்கும் மக்கள் நீதி மய்யம் - புதிய பாடல் வெளியீடு
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன். இவர் தனது அதிகாரப்புர்வமான பாடலை இன்று இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசியலில் பரபரப்பாக செயல்பட்டு வருபவர் நடிகர் கமல்ஹாசன். சமீபத்தில் ஸ்டெர்லைட் விவகாரம், காவிரி மேலாண்மை வாரியம் ஆகியவற்றிற்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், தனது புதிய கட்சியின் செயல்பாட்டை விளக்கும் வகையில் பாடல் ஒன்றினை வெளியிட்டுள்ளார். கமல்ஹாசன் குரலில், வித்யாசாகர் இசையமைத்துள்ள வெளிவந்துள்ள இந்தப் பாடல் சுமார் 3.37 நிமிடங்கள் நீடிக்கிறது. முக்கியமாக இப்பாடலின் வரிகளையும் கமல்ஹாசன் அவர்களே எழுதியுள்ளார்.
“நாளை நமதே... வேளை இனிதே” என்று துவங்கும் இந்தப் பாடலின் பின்னணியில் கமல்ஹாசன் பங்குகொண்ட நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் ஆகியவை இடம்பெறுகின்றன. இன்று வியாழக்கிழமை வெளியான சில மணிகளில் பத்தாயிரக்கணக்கானோர் கண்டுகளித்துள்ளனர்.
அந்த பாடல் இதோ:
மேலும் செய்திகளை படிக்க: thesubeditor.com