ரோபோவாக மாறிய ஹவுஸ்மேட்ஸ் ,அர்ச்சனாவை டார்கெட் செய்யும் பாலா - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது ?நாள் 65
ரோபோ பாட்டு போட்டது குறியீடுனு டாஸ்க் அறிவிப்பு வந்த போது தான் தெரிஞ்சுது.
இந்த வார லக்சரி பட்ஜெட் டாஸ்க். ஹவுஸ்மேட்ஸ் இரண்டு அணிகளாக பிரிய வேண்டும். மனிதர்கள் ஒரு அணி, ரோபோக்கள் ஒரு அணி. மனிதர்கள் செய்யும் வேலைகள் அனைத்தையும் ரோபோக்கள் தான் செய்யனும்.இது ஒரு பஸ்ஸர் டூ பஸ்ஸர் டாஸ்க். ரோபோக்கள் அணியில இருந்து இருவரை தேர்ந்தெடுத்து டார்கெட் பண்ணி அவங்க கிட்ட இருந்து மகிழ்ச்சி, கோபம், துக்கம் உண்ர்ச்சிகள்ல இருந்து ஏதாவது இரண்டு உண்ர்ச்சியை வரவழைக்கனும். ரோபோக்களுக்கு ரெண்டு ஹார்ட் கொடுக்கபட்டிருக்கும். அவங்க உணர்ச்சிவசப்பட்டா அந்த ஹார்ட்டை எடுத்துடலாம். ரெண்டு ஹார்ட்டையும் எடுத்துட்டா டிப்யூஸ் ஆன ரோபோவா மாறிடுவாங்க.
மனிதர்கள் அணிக்கு பாலாவும், ரோபோக்கள் அணிக்கு அர்ச்சனாவும் கேப்டன். அவங்க டீம் பிரிக்கறதை பார்த்து சின்ன வயசுல கிரிக்கெட் விளையாடும் போது டீம் பிரிச்சது ஞாபகம் வந்துடுச்சு.
டீம் பிரிக்கும் போதே அன்பு குரூப்ல இருந்து தான் ஆள் எடுத்தார் பாலா.ரியோ, நிஷா ரெண்டு பேரையும் தான் முதல்ல எடுத்தாரு ரமேஷ். ரம்யாவை முதல்ல செலக்ட் செஞ்சாங்க அர்ச்சனா. அன்பு டீமை ரெண்டா பிரிச்சுட்டு தான் ஆரியை தன் டீம்ல எடுத்தாரு பாலா. ரியோ, நிஷா, ஆரி, அனிதா, ஆஜித் பாலா டீம். சோம், ரமேஷ், ரம்யா, கேப்பி, ஷிவானி அர்ச்சனா டீம்.
டாஸ்க் ஆரம்பிச்சது. ஒரு வகையில கொஞ்சம் மொக்கை டாஸ்க் தான். ரூல்ஸ்படி ஏதாவது ரெண்டு ரோபோவை தான் டார்கெட் செய்யனும். ஆனா இவங்க மொத்த பேரையும் டார்கெட் செஞ்சுட்டு இருந்தாங்க. பிக்பாஸ் கூப்பிட்டு சொன்னதுக்கு அப்புறம் தான் மாத்திருக்காங்க.
டாஸ்க் சிறப்பா செய்யும் அர்ச்சனா தான் இவங்களோட மெயின் டார்கெட். ஆரம்பத்துலேயே ஒரு ஹார்ட்டை இழந்த ஷிவானியை டார்கெட் செய்யலாம்னு மத்தவங்க சொன்ன போது பாலா அதை கேக்கல. அது கூட சர்ச்சையாக வாய்ப்பிருக்கு. ஆனா பாலாவோட முழு டார்கெட்டும் அர்ச்சனா மேல தான் இருந்தது. அவங்களை பிரேக் பண்ண வைக்கறது தான் பாலாவோட ப்ளானா இருந்தது. அர்ச்சனாவுக்கு முட்டை பிடிக்காதுங்கறதால அதை கைல தொட சொல்லி, மூஞ்சில பூசிக்க சொன்னாங்க. ஆனா அர்ச்சனா அதை அசால்டா செஞ்சாங்க.
அதே மாதிரி மத்த ரோபோக்களுக்கும் ஏதேதோ செஞ்சுட்டே இருந்தாங்க. ஆனா அதிகமா டார்கெட் செய்யப்பட்டது அர்ச்சனா, சோம், ரமேஷ் 3 பேரும் தான்.இவங்களை டார்கெட் பண்ற பொறுப்பை ரியோவும் நிஷாவும் தான் ஏத்துகிட்டாங்க.
தொடர்ச்சியா அர்ச்சனாவை டார்கெட் பண்ணிட்டு இருந்தாலும் அவங்க ரொம்பவும் அமைதியா தான் இருந்தாங்க. டாஸ்க்ல ஜெயிக்கனும்னு தான் விளையாடினாங்க. இவங்களை டார்கெட் செய்ய நிஷா கொஞ்சம் ஓவர் பர்பாமன்ஸ் செய்யும் போது தான் விளையாட்டு வினையாக ஆரம்பிச்சது.
அர்ச்சனா கிட்ட அவங்க அப்பாவை பத்தி கேட்டு அவங்களுக்கு கோவம் வர வைக்கனும்னு நிஷாவோட ப்ளான். தனிமைல இருக்கும் போது நிஷா கிட்ட சொன்ன பர்சனல் பக்கங்கள். இதை டாஸ்க்ல யூஸ் பண்ணினது ரொம்ப தவறான விஷயம். அதே மாதிரி சோம்க்கு தலைல அடிச்சா கோவப்படுவான்னு சொன்னதும் நிஷா தான். ஒதெல்லாம் பேக்பயர் ஆகப்போகுதுனு நிஷாவுக்கு தெரியல.
அர்ச்சனா கிட்ட நிஷா பேசிட்டு இருக்கும் போதே அங்க வந்த சோம் கோவம் வந்தா மாதிரி நடிச்சாரு. இது ரியோவோட ப்ளான். ஆனா நிஷாவுக்கு அது புரியல. அதுக்கு ஒரு வாக்குவாதம் பண்ணினாங்க. அர்ச்சனா கிட்ட பேசின விஷயத்துக்காக பாத்ரூம் போய் அழுதுட்டு சாரி சொல்லிட்டு இருந்தாங்க நிஷா. ரியோ வந்து சமாதானபடுத்தறாரு.
வெளிய ரமேஷை கோபபடுத்தறா மாதிரி கேள்விகள் கேட்டுட்டு இருந்தாரு ஆரி. அப்ப ஆரி கிட்ட ரமேஷ்க்காக சண்டை போடறா மாதிரி நிஷாவை நடிக்க சொல்றாரு ரியோ. அவங்களும் நடிக்கறாங்க. ஆனா ரமேஷ்க்கு அது ட்ராமானு தெரிஞ்சுடுது.
இந்த பக்கம் அர்ச்சனா கிட்ட இருந்து ரெண்டு ஹார்ட்டும் எடுத்ததை பிக்பாஸ் கிட்ட விளக்கம் சொல்றாரு பாலா. அதுக்கு அர்ச்சனா மறுப்பு தெரிவிக்கறாங்க.
தொடர்ச்சியா அவங்களை டார்கெட் செஞ்சது, பர்சனல் விஷயங்களை பேசினது, தனக்கு பிடிக்காத விஷயத்தை செய்ய சொன்னது, டாஸ்க்ல நேர்மையில்லாம செயல்பட்டது, இதெல்லாம் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமா கோபப்பட ஆரம்பிச்சாங்க அர்ச்சனா. பாலா, ரியோ ரெண்டு பேர் கூடவும் விவாதம் போய்ட்டே இருந்தது.
ஒரு கட்டத்துல வெடிச்சு அழுதுட்டாங்க. தன்னோட அப்பாவை பத்தி பேசினது, அதுவும் நிஷா பேசினது அவங்களால தாங்கிக்க முடியல. யாராலையும் சமாதானபடுத்த முடியல. ரொம்பவும் உக்கிரமா மாறிட்டாங்க.
இன்னிக்கும் இந்த டாஸ்க் தொடரும்ங்கறதால இந்த பிரச்சினை தொடரும்.