ரஜினி படத்தை தவிர வேறு யார் படமும் இடம்பெறக்கூடாது: ரசிகர்களுக்கு உத்தரவு
புதிய கட்சி தொடங்க இருப்பதாக ரஜினிகாந்த் அறிவித்ததைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்களும் ரஜினி மக்கள் மன்றத்தினரும் பல்வேறுவிதமான போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். இதில் சில ஊர்களில் புதிய கட்சியின் அவர்களை ஒருங்கிணைப்பாளரான அர்ஜுன மூர்த்தியின் படமும் ஆலோசகரான தமிழருவி மணியனின் படமும் இடம்பெற்றிருந்தது.மன்ற நிர்வாகிகள் சுதாகர் உத்தரவிட்டுள்ளார்.
ரஜினி மக்கள் மன்றம் சார்பாக அதன் நிர்வாகி சுதாகர் அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் தொலைப்பேசி வழியே பேசியுள்ளார். அதில் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக ஒட்டப்படும் போஸ்டர்களில் அர்ஜுன மூர்த்தி, தமிழருவி மணியன் ஆகியோரது புகைப்படமோ அல்லது தனது ( சுதாகர்) புகைப்படமோ இடம்பெறக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.ரஜினியின் புகைப்படத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.