ஆல்கஹால் அருந்தினால் கொரோனா தடுப்பு மருந்து வேலை செய்யாது... நிபுணர்கள் சொல்வது என்ன?!
கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளில் உலக நாடுகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. அந்தவகையில், அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனம் ஒரு மருந்து கண்டுபிடித்துள்ளது. ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனம், அமெரிக்காவின் பைஷர் நிறுவனத்துடன் இணைந்து ஒரு மருந்தை ஆய்வு செய்து வருகிறது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு நிறுவனமும் ஒரு தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்து, முதல்கட்ட சோதனையில் வெற்றி பெற்றிருக்கிறது.
இதேபோல் பல நாடுகளை சேர்ந்த நிறுவனமும் சோதனையில் இறங்கியுள்ளன. இதற்கிடையே,. மதுபானம் அருந்துவது கொரோனா தடுப்புமருந்தை பாதிக்கும் என்று ரஷ்ய நிபுணர் தகவல் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் இந்த வாரம் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. முதல்கட்டமாக, மருத்துவ ஊழியர்கள், சமூக பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இத்தடுப்பூசி போடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதற்கிடையேதான், `தடுப்பூசி போடுவதற்கு 2 வாரங்களுக்கு முன்பும், தடுப்பூசி போட்ட 42 நாட்கள் வரையிலும் மதுபானம் அருந்தக்கூடாது. அப்படி அருந்தினால், அது கொரோனா தடுப்புமருந்தை பாதிக்கும்" என்று அந்நாட்டின் சுகாதார கண்காணிப்பு அமைப்பின் தலைவரான அன்னா போபோவா தெரிவித்துள்ளார்.