வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதில் தவறு செய்துவிட்டாய் சித்து..! நடிகை ரேகா நாயர் குற்றச்சாட்டு..!
பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லையாக நடித்து பல இதயங்களை கொள்ளை அடித்தவர் தான் விஜே சித்ரா. இந்நிலையில் இன்று விடியற்காலையில் ஷூட்டிங் முடித்துவிட்டு நட்சத்திர ஓட்டலுக்கு திரும்பிய சித்து 3.30 மணியளவில் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி காட்டு தீயாய் பரவியது. சித்து தற்கொலை செய்து கொண்ட பொழுது அவரது வருங்கால கணவரும் அங்கு இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் போலீஸ் அவரை பிடித்து வைத்து பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் பல திடுக்கிடும் தகவல்களும் வெளியாகி வருகின்றது. இந்நிலையில் சித்துவின் நெருங்கிய தோழியான நடிகை ரேகா நாயர் அவர்கள் ஒரு ஊடகத்தில் கொடுத்த பேட்டியில் இது வரை வெளிவராத உண்மைகளை தெரிவித்துள்ளார். இது சித்ராவின் மரணத்தில் புதிய திருப்பமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது சித்து ஹேம்நாத்தை காதலிக்கும் பொழுதே நடிகை ரேகா நாயர் நீ வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதில் தவறு செய்து விட்டாய் நன்றாக யோசித்து முடிவு பண்ணு என்று பல முறை காலில் விழாத குறையாய் கெஞ்சியுள்ளார். ஆனால் சித்து அவரது லவ்வர் மேல் வைத்த காதல் கண்ணை மறைத்து விட்டது.
தொழில் அதிபரான ஹேம்நாத் பல பெண்களின் வாழ்க்கையை அழித்துள்ளார் என்ற பெரிய குற்றசாட்டை வைத்துள்ளார் ரேகா நாயர். சித்து ஒரு மாத காலமாகவே போனும் கையுமாக ஒரு நிம்மதி இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார். அவர் கொடுத்த பேட்டியின் மூலம் தெளிவாக தெரிகிறது. அதாவது சித்துவை அவரது வருங்கால கணவர் பயங்கரமாக லவ் டார்ச்சர் செய்துள்ளார். இதனால் மனம் உடைந்த சித்து தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அல்லது அவரே கொலை செய்து விட்டு தற்கொலையாக மாற்றி இருக்க வேண்டும். எது உண்மை? எது பொய்? என்பது போலீஸ் சரியான விசாரணை மேற்கொண்டால் தான் சித்துவின் தற்கொலைக்கு பின்னால் இருக்கும் அனைத்து மர்மங்களும் வெளியே வரும்.