ரூ 10 கோடிக்கு சொத்தை அடகு வைத்து உதவும் நடிகர்..

கொரோனா ஊரடங்கு காலகட்டம் இந்த ஆண்டின் கறுப்பு மாதங்களாக மாறிவிட்டன. ஊரடங்கில் லட்சக்கணக்கானவர்கள் வேலை இழந்தனர். பல லட்சம்பேர் கொரோனா வைராஸ் நோயால் பாதிக்கப்பட்டார்கள். பலர் தங்கள் இன்னுயிரை இழந்தார்கள்.அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சன், சரத்குமார், விஷால், கருணாஸ், டாக்டர் ராஜசேகர், ஐஸ்வர்யாராய், ஐஸ்வர்யா அர்ஜூன், நிக்கி கல்ராணி, தமன்னா, ஜீவிதா போன்ற பல நட்சத்திரங்கள் பாதிக்கப்பட்ட னர். இவர்கள் சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தலுக்கு பிறகு குணம் ஆகினர். சரத்குமார் தற்போது தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சையில் உள்ளார். கொரோனா ஊரடங்கில் வேலைக்காக சென்ற வெளியூர்கள்.

வெளிமாநிலங்களுக்கு சென்ற பல லட்சம் பேர் சொந்த ஊர் திரும்ப முடியாமல் வேலை இழந்த சாப்பாட்டுகே வழியில்லாமலும் தவித்தனர். அவர்களுக்கெல்லாம் ஒரு நடிகர் உதவிக்கரம் நீட்டினார். அவர் வேறு யாருமல்ல சோனு சூட். அனுஷ்கா நடித்த அருந்ததி, சிம்புவின் ஒஸ்தி. பிரபுதேவாவின் தேவி போன்ற பல படங்களில் சோனு சூட் நடித்துள்ளதுடன் பல தெலுங்கு, இந்தி படங்களில் நடித்திருக்கிறார். கொரோனா ஊரடங்கால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்தவர்களை பஸ், ரயில் போன்றவற்றில் அவர்களின் சொந்த ஊர்களுக்கு சோனு சூட் அனுப்பி வைத்தார். சுமார் 7 லட்சம் பேர்களை அவர் இதுபோல் அனுப்பிவைத்தார். வெளிநாட்டில் தவித்த டாக்டர் மாணவர்களை விமானத்தில் இந்தியா அழைத்து வந்தார்.

இதுதவிர வடநாட்டு கிராமபுற பகுதிகளில் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவித்த ஏழை மாணவர்களுக்கு சைக்கிள், லேப்டாப், மகள்களை ஏரில் கட்டி நிலத்தை உழுத விவசாயிக்கு டிராக்டர் என எண்ணிலடங்காத உதவிகள் செய்தார். இப்போதும் அவரது ஃபேஸ் புக், டிவிட்டர் பக்கங்களில் உதவிகள் கேட்டு கோரிக்கைகள் நிரம்பி வழிகின்றன. அவர்களுக்கும் உதவும் முனைப்பில் உள்ளார் சோனு சூட். இதற்காக ரூ. 10 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அடகு வைத்து கடன் பெற்றிருக்கிறார். அவரது இந்த மனித நேயத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். சோனு சூட்டின் இத்தகைய கொரோனா உதவிகள் மனித நேயத்தை பாராட்டி யுனைடட் நேஷன் டவலப்மெண்ட் புரோகிராம் அமைப்பு அவருக்கு மனிதநேயம் மிக்கவர் என்ற சிறப்பு விருதினை அளித்து கவரவித்துள்ளது. அதேபோல் யாஹூ இணையதளம் சோனு சூட்டுக்கு இந்த ஆண்டின் மனித நேயம் மிக்க மனிதர் என்று தேர்வு செய்து அறிவித்துள்ளது.

More News >>