சர்க்கரை வியாதியின் அறிகுறியாகக் கூட இருக்கலாம்...கவனம்!

இன்றைய ஸ்மார்ட் உலகில் சளி, காய்ச்சல் போல சக்கரை வியாதியும் மலிவாகிப் போனது.

மாறிவரும் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கங்கள், தூக்கமின்மை எனப் பல காரணங்களால் தெரியாத வியாதிகள் எல்லாம்  கூட அறிமுகமே இல்லாமல் நம்மை ஆக்கிரமிக்கத் தொடங்குகின்றன. உடல் நலம் குறையத் தொடங்கும் நிலையில் தெரியும் அறிகுறிகளை கண்டுகொண்டு தகுந்த நிவாரணங்களை எடுத்துக்கொண்டாலே பாதி வியாதிகளை விரட்டிவிடலாம்.

ஆனால், இதுக்கெல்லாமா ஆஸ்பத்திரிக்குப் போவது என நொந்துகொண்டால் பின்னால் நம்மை நாமே நொந்துகொள்ளும்படி ஆகிவிடும். சர்க்கரை வியாதியைப் பொறுத்தவரையில் சின்ன அறிகுறியைக் கூட சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டிய நிலையிலேயே இருக்கிறோம்.

காலத்தில் எடுத்துக்கொள்ளும் நிவாரணம் நம்மை காலத்துக்கும் காப்பாற்றும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். சோர்வு, பதற்றம், மன உளைச்சல், அடிக்கடி வயிற்றுப்போக்கு, நடு இரவில் கண் விழித்தல் ஆகியவை சர்க்கரை வியாதியின் ஆரம்ப நிலை அறிகுறிகளாகக் கூறப்படுகிறது. இம்மாதிரியான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

More News >>