போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வரும் 15 ஆம் தேதி பிரதமர் படத்தை நானே வைப்பேன் ஹெச்.ராஜா பேட்டி..
போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அகற்றப்பட்ட பிரதமர் மோடியின் படத்தை மீண்டும் வரும் 15 ஆம் தேதி நானே வைப்பேன் என ஹெச்.ராஜா தெரிவித்தார்.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஒன்றில் பாஜக ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ஒரு பைசா குறைக்கக் கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டபோது அவர்களைச் சுட்டுக் கொன்றது திமுக ஆட்சி, விவசாயிகள் போராட்டத்தின் போது துப்பாக்கியிலிருந்து குண்டுகள் வராமல் மலர்களா வரும் என விவசாயிகளுக்கு எதிராக அப்போது கருணாநிதி பேசினார்.
2 ஜி வழக்கு தொடர்பாக மு.க.ஸ்டாலின் என்னுடன் விவாதிக்கத் தயாரா? ஒரு கோடிக்கு எத்தனை பூஜ்ஜியம் எனத் தெரியாத திமுகவிற்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி மட்டும் தெரியும். பிரசாந்த் கிஷோருக்கு 380 கோடி ரூபாய் திமுக எப்படி வழங்கியது? இந்த ரூபாய் எங்கிருந்து வந்தது.போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிரதமர் மோடியின் படம் அகற்றப்பட்டது குறித்த கேள்விக்குப் பதிலளித்த ஹெச். ராஜா அந்த அலுவலகத்தில் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி பிரதமர் மோடியின் படத்தை நானே வைப்பேன் என்றார்.