ஆண் இரண்டரை ஆண்டு, பெண் இரண்டரை ஆண்டு.. ஆட்சி குறித்து ஓபிஎஸ்!
தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ், சமீபத்தில் ரஜினி அரசியல் கட்சி அறிவிப்பு குறித்து பதில் கொடுத்தபோது, ``ரஜினி அரசியலுக்கு வந்ததை வரவேற்கிறோம். அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். வாய்ப்பு கிடைத்தால் ரஜினியுடன் கூட்டணி அமைக்கப்படும்" என்று பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் முதல்வர் இபிஎஸ், ``ரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும் அதன்பிறகு பேசுவோம்" எனக் கூறினார்.
இதற்கிடையே, தற்போதும் ஓ.பன்னீர்செல்வம் ஆட்சி குறித்து சர்ச்சசைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான கருத்தரங்கில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் ``ஆண் இரண்டரை ஆண்டு, பெண் இரண்டரை ஆண்டு அரசை ஆட்சி செய்தால் சிறப்பாக இருக்கும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒடுக்க அரசு அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.