அச்சு ஊடகத்திலிருந்து ஆன்லைன் ஊடகத்துக்குக் குறிவைக்கும் ஸ்மிருதி இராணி!

பத்திரிகை சுதந்திரத்துக்கு ஒடுக்குமுறை விதிக்கும் வகையில் சில நாள்களுக்கு முன் இயற்றிய சட்டம் திரும்பப்பெறப்பட்டதை அடுத்து தற்போது ஆன்லைன் ஊடகங்கள் மீது கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது மத்திய அரசு.

தேசிய அளவில் பத்திரிகையாளர்கள் மத்திய அரசுக்கு எதிராக பொய்யான செய்திகளைப் பரப்புவதாகவும் அவ்வாறு இனிமேல் செய்திகள் வெளியிட்டால் அந்தச் செய்தியாளர்களின் உரிமை பறிக்கப்பட்டு தண்டனையும் வழங்கப்படும் என நாட்டின் பிரதமர் மோடி சில நாள்களுக்கு முன்னர் புதியதொரு பாரத்தை உருவாக்கும் முயற்சியில் ஒரு சட்டத்தைப் பிறப்பித்தார்.

இதன் அடிப்படையில் பொய் செய்திகள் வெளியிடும் பத்திரிகைக்கும் பத்திரிகையாளர்களுக்கும் தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், பத்திரிகையாளர்கள் தேசிய அளவில் இச்சட்டத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் சட்டம் இயற்றி 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில் மோடி அவர்களாளே சட்டம் திரும்பப்பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த சட்டம் பிறக்க மூளையாக இருந்து செயல்பட்ட மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி தற்போது புதியதொரு யோசனயை நடைமுறைப்படுத்தத் தயாராக இருக்கிறாராம். அதாவது அச்சு ஊடகங்களை விடுத்து ஆன்லைன் மூலம் செய்திகள் வெளியிடும் ஊடகங்களின் மீது இனி முழு கவனம் செலுத்த உள்ளாராம்.

இதன் அடிப்படையில் ஸ்மிரிதி இராணி தலைமையிலான ஒரு குழு ஆன்லைன் மீடியா நிறுவனங்களுக்கான கொள்கை விதிமுறைகளை வகைப்படுத்தி விரைவில் சட்டமாக்க உள்ளனராம்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>