பிரபல இந்திய நடிகர்களின் வீடுகளை நினைவு இல்லமாக்கும் பாக் அரசு..

பழம்பெரும் அரசியல் தலைவர்கள் வாழ்ந்த வீடுகள் நினைவு இல்லமாக மாற்றப்படுவது வழக்கம். தமிழகத்தில் தி நகரில் உள்ள எம்ஜிஆர் இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது. காமராஜர் வாழ்ந்த வீடும் நினைவு இல்லமாக உள்ளது. போயஸ் கார்டனில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. இதுபோல் இந்தியா முழுவதும் பல தலைவர்கள் இல்லங்கள் நினைவு இல்லங்களாக மாற்றப்பட்டுள்ளன.

பாலிவுட் பழம் பெரும் நடிகர்கள் மூதாதையர்கள் வாழ்ந்த இல்லங்களைப் பாகிஸ்தான் அரசு நினைவு இல்லங்களாக மாற்ற முடிவு செய்துள்ளது. அந்த காலத்து இந்திய பாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் திலீப் குமார், ராஜ்குமார். இவர்கள் மூதாதையர்கள் வாழ்ந்த இல்லங்கள் பாகிஸ்தானில் உள்ளது. அந்த இல்லங்களை வாங்க பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா அரசாங்கம் முடிவு செய்தது.

கைபர் பதுன்க்வா நகரின் மையத்தில் திலீப் குமார் மற்றும் ராஜ் கபூரின் மூதாதையர் வீடுகள் உள்ளன. அவற்றின் விலையை முறையே 80,56,000 மற்றும் 1,50,00,000 எனத் தற்காலிகமாக அரசாங்கம் நிர்ணயித்துள்ளது. இந்த வடக்கு பாகிஸ்தான் நகரின் மையத்தில் அமைந்துள்ள இரண்டு கட்டிடங்கள் தேசிய பாரம்பரியமாக அறிவிக்கப்பட்டுள்ளன.உண்மையில், வீடுகளின் உரிமையாளர்கள் அவற்றை இடித்துவிட்டு அங்கு ஒரு வணிக வளாகத்தை உருவாக்க விரும்பினர். ஆனால் அரசாங்கம் அவர்களின் திட்டங்களுக்கு அரசு மாற்று யோசனை தெரிவித்தது. இந்த வீடுகளை வாங்கி, பாழடைந்த கட்டிடங்களைப் பழுதுபார்த்து எதிர்கால தலைமுறையினருக்கு நடிகர்களின் பெருமையை பறைசாற்றும் இந்த முயற்சியை அம்மாநில அரசு எடுத்துள்ளது.

ராஜ் கபூரின் மூதாதையர் வீடு கபூர் ஹவேலி என்று அழைக்கப்படுகிறது. இதை பிருத்வி ராஜ் கபூரின் தந்தை தேவன் பஷேஷ்வர்நாத் கபூர் 1918-22 க்கு இடையில் இதனை கட்டினார். பிருத்விராஜ் கபூரின் மூன்று மகன்களும் கட்டிடத்தில் பிறந்தனர். திலீப் குமாரின் (முஹம்மது யூசுப் கான்) மூதாதையர்களின் கட்டிடமும் அப்பகுதியிலேயே உள்ளது.

More News >>