விஜய் சேதுபதியுடன் இரண்டு டாப் ஹீரோயின்கள் படம் தொடக்கம்..
டைரக்டர் எஸ்பி.ஜனநாதன் இயக்கத்தில் லாபம் படத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை விஜய் சேதுபதி முடித்துக்கொடுத் தார். இதையடுத்து கடந்த ஆண்டு அறிவித்த புதிய படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்கிறார்.விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் படத்தில் 2 ஆண்டுக்கு முன் நடித்தார் விஜய் சேதுபதி. ஜோடியாக நயன்தாரா நடித்தார். அந்த கூட்டணி மீண்டும் இணைகிறது. இப்படத்துக்குக் காத்து வாக்குல ரெண்டு காதல் எனப் பெயரிடப்பட்டது. கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட இப்படம் கொரோனா ஊரடங்கால் அறிவிப்போடு நின்றிருந்தது. இதில் சமந்தாவும் நடிக்கிறார்.
கொரோனா ஊரடங்கு தளர்வில் விஜய் சேதுபதி லாபம் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தார். மேலும் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார். ஆனால் அதற்குத் தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பலத்த எதிர்ப்பு எழுந்த நிலையில் தனது வாழ்க்கை படத்திலிருந்து விலகிக்கொள்ளும்படி முத்தையா முரளிதரனே கேட்டுக்கொண்டதையடுத்து விஜய் சேதுபதி அப்படத்திலிருந்து விலகினார்.
இந்நிலையில் தான் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்துக்கு விஜய் சேதுபதி கால் ஷீட் ஒதுக்கினார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு துவங்கியது விஜய்சேதுபதி நயன்தாரா, சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு துவங்கியது. படப்பிடிப்பில் ஹீரோ மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, இயக்குநர் விக்னேஷ் சிவன், தயாரிப்பாளர் லலித்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.செவன் ஸ்கிரீன் ஸ்டியோ சார்பாக லலித்குமார், ரவுடி பிக்சர்ஸ் சார்பாக விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்து வரும் முக்கியமான படமாக இருக்கிறது காத்துவாக்குல ரெண்டு காதல் படம்.
இளைஞர்களை ஈர்க்கும் பக்கா எண்டர்டெய்ன்மெண்ட் சினிமாக்களைத் தரும் விக்னேஷ் சிவன் இப்படத்தை எழுதி இயக்குகிறார். மேலும் படத்தின் வெற்றிக்கு இப்பவே உத்தரவாதம் தருவது போலப் படத்தின் இசைப் பணியை அனிருத் துவங்கியிருக்கிறார்.பெரிய பட்ஜெட்டில் ஸ்ட்ராங்க் என்டர்டெயின்மெண்ட் விஷயங்களோடு தயாராகும் இப்படம் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருக்கும் என்று உறுதியாக நம்பலாம் என்கிறது படக்குழு.நடிகர் விஜய் சேதுபதி தமிழில் அதிகம் டிமாண்ட் உள்ள நடிகர். ஹீரோவாக நடிப்பதுடன் ரஜினியுடன் பேட்ட படத்தில் வில்லனாக நடித்தார். அடுத்து விஜய்யின் மாஸ்டர் படத்திலும் வில்லனாக நடித்துள்ளார். இப்படம் இன்னும், திரைக்கு வரவில்லை. இதனை லோ கேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார்.
தமிழ் தவிரத் தெலுங்கு, மலையாள படங்களிலும் விஜய் சேதுபதி நடிக்கிறார். அதே போல் இந்தியில் அமீர்கான் நடிக்கும் லால் சிங் சத்தா படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார் விஜய் சேதுபதி. இப்படத்துக்கு லாக் டவுனுக்கு முன்பு கால்ஷீட் கொடுத்திருந்தார். அமீர்கான் தனது படங்களை நேர்த்தியாக உருவாகுவதில் அதிக கவனம் செலுத்துவார். இப்படத்தில் விஜய் சேதுபதி தனது கதாபாத்திரத்துக்காகச் சற்று உடல் இளைத்து நடிக்க வேண்டும். ஆனால் இப்போது அவர் பிறபடங்களில் நடிக்கும் தோற்றத்தை மாற்ற இயலாத நிலையில் உள்ளார்.ஊரடங்கிற்கு முன்பு விஜய் சேதுபதி கொடுத்த கால்ஷீட் பயன்படுத்த முடியாத நிலையில் அமீர்கான் இருந்தார்.
ஆனால் தற்போது வேறு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருப்பதால் மீண்டும் அமீர்கான் படத்துக்குக் கால் ஷீட் ஒதுக்க முடியாத நிலையில் விஜய் சேதுபதி இருக்கிறாராம்இதனால் அமீர்கான் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகி இருப்பதாகத் தெரிகிறது. துக்ளக் தர்பார் படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதி தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் இணைந்திருக்கிறார். இப்படப்பிடிப்பில் நயன்தாரா, சமந்தா விரைவில் இணைய உள்ளனர்.