தல பட அப்டேட் கேட்டு ரசிகர்கள் ஹேஷ் டேக் வைரல்.. பதில் அளித்த படக்குழு..
விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை படங்களையடுத்து அஜீத்குமார் நடிக்கும் படம் வலிமை. இப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார்.கொரோனா ஊரடங்கின்போது இதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்த நிலையில் கடந்த ஒரு மாதத்துக்குமுன் மீண்டும் தொடங்கியது. ஐதராபாத் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் இதன் படப்பிடிப்பு நடந்தது அஜீத் பைக்கில் ரவுடிகளுடன் மோதும் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. அப்போது பைக் கவிழந்ததில் அஜீத்துக்கு காலில் காயம் ஏற்பட்டது.அதற்காக சிறிது நேரம் ஓய்வும் சிகிச்சையும் எடுத்துக் கொண்டு மீண்டும் அக்காட்சியில் நடித்துக் கொடுத்தார். ஐதராபாத் படப்பிடிப்பு முடிந்து அடுத்த கட்ட ஷூட்டிங் திட்டமிடப்படுகிறது.
இந்நிலையில் ரசிகர்கள் வலிமை குழுவிடம் படத்தின் அப்டேட் தருமாறு நீண்ட நாட்களாக ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். வலிமை அப்டேட்டை புதுப்பிக்கக் கோரி ரசிகர்கள் சமூக ஊடகங்களில் ஹேஷ்டேக்குகளை பிரபலப்படுத்தி வருகின்றனர். மாஸ்டர் பட டீசர் வந்துடுச்சு,விஜய் அடுத்த பட கமிட் மெண்ட் வந்தாச்சு,ஜெகமே தந்திரம் அப்டேட் வந்துடுச்சு,கமல் புது பட நியூஸ் வந்தாச்சு,தனுஷ் கர்ணன் மேட்டர் வந்துடுச்சு.ஏன், ரஜினியே அரசியலுக்கு வந்தாச்சு,ஆனா வலிமை அப்டேட் மட்டும் ஏன் இன்னும் வரல்லை? என்று ரசிகர்கள் கேள்விமேல் கேள்வி கேட்டு வருகின்றனர்.
அனைத்து சிறப்பு சந்தர்ப்பங்களிலும் அவர்கள் புதுப்பிப்பைக் கேட்டுள்ளனர், ஆனால் குழு ஒருபோதும் பதிலளிக்கவில்லை. தற்போது அளித்துள்ள பதிலில் வெவ்வேறு சவால்களுடன் படத்தின் படப்பிடிப்பில் நடந்து கொண்டிருப்பதால் ரசிகர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்று ஒரு அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது.அஜித்தின் பி.ஆர் ஒரு அறிக் கையை பகிர்ந்து கொண்டார், அதில் வலிமை படக் குழு பல்வேறு சவால்களுடன் படத்தின் படப்பிடிப்பு நடத்தி வருகிறது மற்றும் படக்குழு விரைவில் ஒரு புதுப்பிப்புடன் வரும். அப்டேட் கேட்கும் அனைத்து ரசிகர்களுக்கும், அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளர் போனி கபூருடன் படப் பிடிப்பின் போது ஏற்பட்ட காயத்துடன் அஜித் குமார் படத்தில் மிகவும் கடினமாக உழைத்து வருகிறார். அவர்கள் இருவரும் ஒன்றாக முடிவு செய்து சரியான நேரத்தில் ஒரு புதுப்பிப்பை வெளியிடுவார்கள்.
அதுவரை ரசிகர்கள் பொறுமையாக இருக்கவும், புதுப்பிப்புக்காகக் காத்திருக்கவும் எனக் கேட்டுக்கொள்கிறோம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இப்படத்தில் ஹுமா குரேஷி ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.