கிட்னி பிரச்னையால் அவதிப்படுகிறேன்- வருந்தும் நிதி அமைச்சர்!

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மோசமான உடல்நிலையால் தனது பதவியேற்பு விழாவில் கூட பங்கேற்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கடந்த திங்கள் கிழமை முதல் தனது அலுவலகத்துக்கு வரவில்லை. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் அறிக்கையில் தனக்கு சிறுநீரகம் தொடர்பாந பிரச்னை இருப்பதாகத் தெரிவித்துள்ளார். 

ஜெட்லி, "சிறுநீரகம் தொடர்பான பிரச்னையாலும், சில தொற்று பாதிப்பாலும் சிகிச்சை பெற்று வருகிறேன். இதனால் கட்டுப்பாடான வீட்டு சூழலில் இருந்தே பணியாற்றி வருகிறேன். எனது மேற்படி சிகிச்சை முறைகள் குறித்து எனக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களால் மட்டுமே கூறமுடியும்" என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முதலில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரகம் தொடர்பான பரிசோதனை சிகிச்சை எடுத்துக்கொண்ட ஜெட்லி தற்போது வீட்டிலிருந்தபடியே சிகிச்சை எடுத்துக்கொண்டு வருகிறார். இதனால், ராஜ்ய சபா உறுப்பினரான ஜெட்லியின் பதவிக்காலம் சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்து மீண்டும் ராஜ்ய சபா எம்.பி ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெட்லி, புதிதாகப் பதவிப் பிராமாணம் கூட எடுக்கச்செல்லவில்லை.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>