தளபதி 65 படத்தை இயக்கும் இயக்குனர் அறிவிப்பு..
லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' வெளியீட்டை தளபதி விஜய்யின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தாலும், தற்காலிகமாக 'தளபதி 65' என்று அழைக்கப்படும் அவரது அடுத்த படத்தைச் பற்றி ஏராளமான சலசலப்புகள் எழுந்துள்ளன. பல இயக்குனரின் பெயர்கள் விஜய்யுடன் இணைத்து பேசப்பட்டு வருகிறது. தற்போது இறுதியாக உறுதிப்படுத்தப்பட்டு, நயன்தாரா நடித்த நகைச்சுவை த்ரில்லர் நாடகமான 'கோலாமா கோகிலா' மூலம் அறிமுகமான நெல்சன் திலிப்குமார் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவார் என்று இப்போது அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'அண்ணாத்த' படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது.சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டாக்டர்' படத்தின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் இயக்குனர் நெல்சன், விஜய் மற்றும் சன் பிக்சர்ஸ் உடன் கைகோர்த்ததில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அறிவிப்பு வீடியோவில் காட்டப்பட்டுள்ள துப்பாக்கிகள் மற்றும் வேகமான கார்களின் பார்வையால் இந்த படம் ஒரு அதிரடி படம் பொழுதுபோக்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், லோகேஷ் கனகராஜுடன் விஜய்யின் 'மாஸ்டர்' பொங்கல் 2021ல் திரைக்கு வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த கேங்க் ஸ்டர் படத்துடன் கொரோனா அச்சத்தால் திரையரங்குகளுக்கு வராமலிருக்கும் ரசிகர்கள் கூட்டத்தை மீண்டும் இழுக்கத் தயாரிப்பாளர்கள் ஆர்வமாக உள்ளனர். முன்னதாக விஜய் 65 படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதாக கூறப்பட்டது, அதற்கான ஸ்கிரிப்ட் தயாராகி பேச்சு வார்த்தை நடந்து வந்தது. எஸ்.தமன் இசை அமைக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இதனை தமனும் உறுதி செய்திருந்தார். ஆனால் பேச்சு வார்த்தையில் முரண்பட்ட கருத்து மற்றும் சம்பள பிரச்சனை, ஸ்கிரிப்ட்டில் மாற்றம் போன்ற சில முக்கிய பிரச்சனைகளில் சமரசம் ஏற்படவில்லை எனவே ஏ.ஆர்.முருதாஸ் இயக்குவது கடைசிவரை உறுதி ஆகவில்லை.
இந்நிலையில் தான் இயக்குனர் அட்லீ அலுவலகத்துக்கு விஜய் சென்றிருந்தார். அந்த தகவல் வெளியானதால் பிகில் படத்துக்குப் பிறகு அட்லீயே விஜய் படத்தை இயக்கலாம் என்று கிசுகிசு பரவியது. இதற்கிடையில் அட்லீ இந்தி நடிகர் ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். அதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது. எல்லா குழப்பங்களுக்கும் தீர்வாக தற்போது நெல்சன் திலீப்குமார் விஜய்யின் 65 படம் இயக்குகிறார் என்ற தகவல் உறுதி ஆகி உள்ளது.