நிரவ் மோடியை கைது செய்துகொள்ளலாமா?- ஹாங்காங் அரசுக்கு ஓலை அனுப்பும் மத்திய அரசு

நிரவ் மோடியை கைது செய்துகொள்ளலாமா? என ஹாங்காங் அரசுக்கு ஓலை அனுப்பி கடிதப் போக்குவரத்து நடத்திக்கொண்டிருக்கிறது மத்திய அரசு.

குஜராத் வைர வியாபாரியான நீரவ்மோடி, பஞ்சாப் நேசனல் வங்கியில் ரூ. 11 ஆயிரத்து 600 கோடி அளவில் மோசடி செய்துவிட்டு, இந்தியாவை விட்டு தப்பியோடியவர். அவரது வீடு மற்றும் நிறுவனங்களில், சிபிஐ, அமலாக்கத்துறை அமைப்புக்கள் அதிரடி சோதனை நடத்தி பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளைப் பறிமுதல் செய்தன.

முன்னதாக வங்கி மோசடி தொடர்பாக ஜனவரி 31ஆம் தேதி சிபிஐ வழக்குப்பதிவு செய்து, ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் விடுத்தது. ஆனால் நீரவ் மோடி, அவருடைய குடும்பத்தார் மற்றும் கூட்டாளிகள் நாட்டைவிட்டு ஜனவரி மாத துவக்கத்திலேயே வெளிநாட்டுக்குத் தப்பினர்.

இந்நிலையில் நிரவ் மோடி ஹாங்காங்கில் பதுங்கி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்டர்போல் உதவியுடன் நிரவ் மோடி இருப்பிடத்தை அறிந்த இந்திய அரசு ஹாங்காங் அரசிடன் நிரவ் மோடியை கைது செய்துகொள்வதற்கான அனுமதி கடிதத்தை சம்ர்ப்பித்துவிட்டு பதிலுக்காகக் காத்திருக்கிறது.

More News >>