திருமண பந்தத்தில் அடியெடுத்து வைத்த வருண்... தோழியை கரம்பிடித்தார்!
நடந்து முடிந்த ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடிய தமிழக வீரர்களில் ஒருவர் வருண் சக்கரவர்த்தி. ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர் முதல் முறை 5 விக்கெட் ஹால் எடுத்து அசத்தினார். மேலும் பேட்ஸ்மேன்கள் ரன் எடுப்பதை தனது கூக்ளி, மற்றும் லெக் ஸ்பின்னால் அசத்தலாக தடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். ரசிகர்கள் மட்டுமல்ல, கிரிக்கெட்டின் கடவுள் எனப்படும் சச்சின் டெண்டுல்கரின் பாராட்டையும் பெற்றார்.
வருண் குறித்து பேசிய சச்சின் டெண்டுல்கர், இந்த ஐபிஎல் தொடரில், வருண் சிறப்பாக பந்துவீசிகிறார். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், சுனில் நரேன் மாதிரியான பந்துவீச்சாளர்கள் பந்து வீசும்போது, எதிர்முனையில் இருக்கும் பந்துவீச்சாளர்களைத் தான், பேட்ஸ்மேன்கள் அதிகம் பிரஷர் கொடுப்பார்கள். ஆனால் அந்த பிரஷரை எளிதில் கையாண்டு, மிகச் சிறப்பாக பந்துவீசி என்னை அதிகம் ஈர்த்து விட்டார் வருண்.
அவரின் தன்னம்பிக்கை பந்துவீச்சில் வேரியேஷனும் கொடுக்க முடிகிறது. இவரைப் போல தன்னம்பிக்கை கொண்ட பந்துவீச்சாளர்கள் பௌலிங் செய்யும் போது எதை செய்ய வேண்டுமென திட்டமிடுகிறார்க்ளோ, அதை செயல்படுத்தவும் முடியும்" என நெகிழ்ந்து கூறினார். தனது சிறப்பான செயல்பட்டால் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு வருணுக்கு கிடைத்தது. ஆனால் காயம் காரணமாக அவரால் விளையாட முடியவில்லை.
அந்த வருத்தத்தில் வருண் இருந்தாலும், தற்போது அவரின் வாழ்க்கையில் மற்றொரு சந்தோஷம் அதனை ஈடுகட்டியுள்ளது. ஆம், திருமண பந்தத்தில் இணைந்துள்ளார் வருண். தனது பல ஆண்டுகால தோழியை கரம்பிடித்துள்ளார். இவர்களின் திருமணம் எளிய முறையில் சென்னையில் உறவினர்கள் முன்னிலையில் நிகழ்ந்துள்ளது. இந்த புகைப்படங்கள் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.