சேலத்துக்கு கடத்திவரப்பட்ட ரூ. 4 கோடி மதிப்பிலான வெள்ளி கட்டிகள் ஆந்திராவில் பறிமுதல்

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இருந்து சேலத்திற்கு எந்தவித ஆவணங்களும் இல்லாமல் காரில் கடத்தி வரப்பட்ட 4 கோடி மதிப்புள்ள வெள்ளி கட்டிகளை ஆந்திர போலீசார் பறிமுதல் செய்தனர். ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்ட போலீசார் அமகட்டாடு சுங்க சாவடி அருகே இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட காரை நிறுத்தி அவர்கள் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் காரில் இருந்த 18 சிறிய பைகளில் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள 687 கிலோ வெள்ளி கட்டிகள் கண்டறியப்பட்டது. இந்த வெள்ளி கட்டிகள் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் கொண்டு வரப்பட்டது. இதை தொடர்ந்து காரில் வந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ் ஜெயராம் (39) பாஸ்கர் (38) கதிர்வேல் (29)சதீஸ் (34) மற்றும் ஒரு சிறுவன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இருந்து சேலம் மாவட்டத்திற்கு எந்தவித ஆவணங்களும் இல்லாமல் வெள்ளி கட்டிகளை ஐதராபாத் பெங்களூர் வழியாக சேலம் கொண்டு செல்ல திட்டமிட்டு கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து வெள்ளி கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More News >>