நடிகர் ரஜினிகாந்த்துக்கு மோடி பிறந்த நாள் வாழ்த்து..
இன்று பிறந்த நாளை கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.நடிகர் ரஜினிகாந்த்துக்கு இன்று(டிச.12) பிறந்த நாள். கடந்த 1950ம் ஆண்டு இதே நாளில் பிறந்த ரஜினி தனது 70வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இம்மாதம் 31ம் தேதி புதிய கட்சிக்கான தேதி அறிவிக்கப் போவதாகவும், ஜனவரியில் கட்சியைத் தொடங்கப் போவதாகவும் அவர் ஏற்கனவே கூறியிருக்கிறார்.இதனால், தமிழக அரசியல் வட்டாரத்திலும் அவரைப் பற்றி நேர், எதிர்மறையான விமர்சனங்கள் அதிகமாகி வருகின்றன.
இந்நிலையில், ரஜினிகாந்த்துக்கு பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர், அன்புள்ள ரஜினிகாந்த் ஜி, மகிழ்ச்சிகரமான பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீங்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.இதற்கிடையே, ரஜினியின் வீட்டு வாசலில் அதிகாலையிலேயே பல ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர். அவர்கள், அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் என்ற வாசகங்கள் அடங்கிய டிசர்ட் அணிந்திருந்தனர்.