பிரபுதேவா பட நடன இயக்குனர் ஐசியூவில் அனுமதி..
நடிகர் பிரபுதேவாவை இந்திய மைக்கேல் ஜாக்ஸன் என்று ரசிகர்கள் அழைக்கின்றனர். தமிழில் பல்வேறு படங்களில் நடித்ததுடன் போக்கிரி, எங்கேயும் காதல் போன்ற படங்களை இயக்கினர். பின்னர் இந்தி படங்களை இயக்கியும் நடித்தும் வருகிறார். கடந்த 2013 ஆண்டு ஏபிசிடி என்ற இந்தி படத்தில் நடித்தார். இப்படத்தை பாலிவுட் பிரபல நடன இயக்குனர் ரெமோ டிசோசா இயக்கினார். அதேபோல் இப்படத்தின் 2ம் பாகத்தையும் கடந்த 2015ம் ஆண்டு ரெமோ இயக்கினார். லால் பஹரேர் கதா, எப் ஏ எல் டி யூ, எண்டர்டைன்மெண்ட் என மேலும் சில படங்களை இயக்கியதுடன் இந்தியில் முன்னணி நடிகர்கள் பலருக்கும் நடனம் அமைத்திருக்கிறார்.
ரெமோ டிசோசாவுக்கு நேற்று நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் இருதயத்தில் அடைப்பு இருப்பதைக் கண்டு பிடித்தனர். உடனடியாக அவரை ஆப்ரேஷன் தியேட்டருக்கு கொண்டு சென்று அடைப்பை நீக்கும் ஆஞ்ஜியோ பிளாஸ்டி செய்தனர். பிறகு அவரை ஐசியூ வார்டுக்கு அழைத்து வந்தனர். தற்போது டாக்டர்கள் கண்காணிப்பில் டிசோசா இருக்கிறார்.
நடன இயக்குனராக இருந்து அதில் புகழ் பெற்ற பின் டைரக்டராக மாறினார் ரெமோ. டிசோஸா பற்றி அவரது மனைவி லிஸ்ல்லே கூறும்போது,டிசோசாவுக்கு இருதயத்தில் அடைப்பு நீக்கச் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது ஐசியூவில் இருக்கிறார். அவருக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். அடுத்த 24 மணி நேரம் மிகவும் முக்கியம் என்றார்.டிசோஸாவுக்கு பாஜிராவ் மஸ்தனி படத்திற்காகச் சிறந்த நடன இயக்குனருக்கான தேசிய விருது கிடைத்தது. நடன இயக்குனர், இயக்குனர் என்பதையும் தாண்டி அவர் பரதேஸ், அஃப்லடூன், மீனாக்ஸி: எ டேல் ஆப் த்ரி சிடிஸ், எண்டர்டெயின் மெண்ட், ஜீரோ ஆகிய படங்களில் நடித்தும் இருக்கிறார். 100 படங்களுக்கு நடனம் அமைத்திருக்கும் ரெமோ தொலைக்கட்சிகளில் பல ரியாலிட்டி ஷோக்களுக்கு ஜட்ஜ் ஆக இருந்திருக்கிறார்.ரெமோ டிசோசா குணம் அடைய திரையுலகினர், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்தும் பிரார்த்தனையும் தெரிவித்திருக்கின்றனர்.