செல்போனில் வாக்காளர் அடையாள அட்டை தமிழகத்தில் அமல்படுத்த தேர்தல் ஆணையம் திட்டம்

தமிழகத்தில் தொலைப்பேசியில் மின்னணு வாக்காளர் அடையாள அட்டை முறையை அமல்படுத்தத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது.வாக்காளர் அடையாள அட்டையை மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் வசதியைத் தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையைப் பதிவு செய்துள்ள தொலைப்பேசிக்கு வரும் ஓ.டி.பி எண்ணைப் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதைக் காண்பித்து வாக்களிக்கும் புதிய திட்டத்தைச் செயல்படுத்தத் தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.இதற்காக, அடுத்த வாரம் நடக்க உள்ள தலைமைத் தேர்தல் ஆணையர்கள் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்.

தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கியவுடன் தமிழ்நாடு, புதுவை, கேரளா, மேற்குவங்கம், அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தல்களில் இதை நடைமுறைப்படுத்தத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் 90 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில், ஒவ்வொரு வாக்காளர் அட்டை தயாரிக்க ரூ.10 முதல் ரூ.15 வரை செலவாகிறது,

எனவே, மின்னணு வாக்காளர் அட்டை திட்டம் வெற்றி பெற்றால் வாக்காளர் அட்டை தயாரிப்பு செலவு பெருமளவு குறையும் என்றும் என்று தேர்தல் ஆணையம் கருதுகிறது.

இந்நிலையில், செல்போன் மூலம் வாக்களிக்கும் புதிய முறைக்கு பல்வேறு அரசியல் கட்சிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

More News >>