கணவராக கிடைத்தது என் பாக்கியம்.. அஞ்சலி தேவி பட வசனம் சொல்லி நடிகை வாழ்த்து..
அந்த காலத்து அஞ்சலி தேவி படங்களில் நீங்கள் எனக்கு கணவராகக் கிடைத்தது என் பாக்யம் என்று வசனம் பேசுவார்கள் அப்படியொரு வசனத்தை சொல்லி கணவருக்காக வாழ்த்து பகிர்ந்திருக்கிறார் நடிகை ஒருவர்.நடிகை சாயிஷா தமிழில் வனமகன் படம் மூலம் அறிமுகமானார். முன்னதாக தெலுங்கில் நாகார்ஜுனா மகன் அகில் ஜோடியாக அகில் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்தியில் அஜய் தேவ்கன் ஜோடி அறிமுகமானார். தற்போது தமிழில் தான் கவனம் செலுத்தி வருகிறார்.
நடிகர் ஆர்யாவுடன் கஜினி காந்த் படத்தில் நடித்தார் சாயிஷா. அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. குடும்பத்தினர் சம்மதத்துடன் இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பிறகும் சாயிஷா தொடர்ந்து நடித்து வருகிறார். டெடி படத்தில் ஆர்வுடன் இணைந்து மீண்டும் நடிக்கிறார். இதற்கிடையில் தெலுங்கில் சீனியர் நடிகர் என் டி பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.
ஆனால் சில வாரங்களுக்குப் பிறகு அந்த படத்திலிருந்து விலகி விட்டார். சாயிஷா தனது உடற்கட்டை பிட்டாக வைத்திருக்க தினமும் உடற்பயிற்சி, நடனப் பயிற்சி மேற்கொள்கிறார். அத்துடன் கணவர் ஆர்யாவுக்கு வகைவகையான பிரியாணி சமைத்துப்போட்டு குஷி படுத்துகிறார். ஆர்யாவும் சாயிஷா மீது மிகுந்த பாசம் வைத்திருக்கிறார். அதை இருவரும் அடிக்கடி வெளிப்படுத்துகின்றனர். கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்த ஆர்யாவுக்கு கேக் வகைகளைச் செய்து தந்து அசத்தினார் சாயிஷா.சார்பட்டா பரம்பரை படத்துக்காக ஆர்யா கட்டுமஸ்தான தோற்றத்துக்கு மாற கடுமையான உடற்பயிற்சிகள் செய்தார். அவருக்கு உடனிருந்து சாயிஷா தேவையானவற்றைச் செய்து தந்தார்.
ஆர்யாவுக்கு 40வது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது, அதற்காக சாயிஷா தடபுடல் ஏற்பாடு செய்திருந்தார். பின்னர் இணைய தள பக்கத்தில் ஆர்யவின் மடியில் அமர்ந்திருப்பது போன்ற படத்தை வெளியிட்ட சாயிஷாநீங்கள் எனக்கு கணவராகக் கிடைத்தது பாக்கியம். மிகப்பெரிய பெருமை. என்றும் உங்களை நேசிக்கும் நான்" எனக் காதலுடன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.